கிரையோபிரசர்வேஷனை கோட்பாடு அளவில் முன்வைத்தவர்! - ஜேம்ஸ் லவ்லாக்

 















ஜேம்ஸ் லவ்லாக் (James lovelock
1919)

அறிவியலாளர், சூழலியலாளர் 

"கார்பன் வெளியீட்டைக் குறைக்க அணுசக்தி உதவும் என்பது என் கருத்து"

"காற்றில் உள்ள குளோரோ ப்ளோரோ கார்பனை (CFC) கண்டறியும் கருவி(ECD), சூழலைப் பற்றிய கேயா கோட்பாடு (Gaia theory) எனது முக்கியமான சாதனை"

இங்கிலாந்தில் உள்ள லெட்ச்வொர்த் கார்டன் சிட்டியில் பிறந்த  அறிவியலாளர். மருத்துவப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். உடல்களைப் பாதுகாக்கும் கிரையோபிரசர்வேஷன் ( cryopreservation) முறையில் ஈடுபாடு காட்டியவர். 

எலிகளை வைத்து சோதித்து வெற்றிகண்டார். இதனால் பல்வேறு அறிவியலாளர்கள், மனிதர்களை கிரையோபிரசர்வேஷன் முறையில் பாதுகாக்கும் ஆராய்ச்சிகளை நம்பிக்கையுடன் தொடர்ந்தனர்.  1960களில் நாசா அமைப்பிற்காக, கோள்களை ஆராய பல்வேறு அறிவியல் கருவிகளை வடிவமைத்து கொடுத்தார்.  தான் எழுதிய நூல்களில் ( The Revenge of Gaia, The Vanishing Face of Gaia) கார்பன் வெளியீடு பற்றி எச்சரித்தவர், பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க அணுசக்தியை ஆதரித்தார். இதனால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். 


https://en.wikipedia.org/wiki/James_Lovelock


கருத்துகள்