இடுகைகள்

சுந்தர் சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நண்பர்களை வம்புக்கு இழுத்தால் சினம் கொள்வான் மதகஜராஜா!

படம்
      நண்பர்களை வம்புக்கு இழுத்தால் சினம் கொள்வான் மதகஜராஜா! இயக்கம் சுந்தர் சி இசை விஜய் ஆண்டனி 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம். தலைப்பில் சொன்னது போல, பள்ளி வாத்தியார் ஒருவரின் மகள் கல்யாணத்திற்கு நான்கு நண்பர்கள் வருகிறார்கள். அந்த கல்யாணத்திலேயே மணப்பெண்ணுக்கு பெரிய விருப்பமில்லை. அவள் தனது அப்பாவின் வழி மாமனைக் காதலிக்கிறாள். ஆனால்,திருமணமோ, அம்மாவின் வழி மாமனோடு நடக்க ஏற்பாடு ஆகிறது.அதாவது பகையாக உள்ள இரு குடும்பங்களை திருமணம் இணைக்கிறது. ஆனால், இதில் நம் நாயகன் உள்ளே புகுந்து கல்யாணத்தை காதல் கல்யாணமாக்கி பிரச்னையை சரி செய்கிறார். அடிதடி, பன்ச் வசனங்கள் இன்னபிற அனைத்தும் உண்டு. அனைத்தையும் தாண்டி காமெடி வருவதுதான் படத்தைக் காப்பாற்றுகிறது. படத்தில் அஞ்சலி, வரலட்சுமி என இரு நாயகிகள். இருவருமே கவர்ச்சி நடனம், மார்பகம் தெரிய குனிந்து யோகா செய்வது, இடுப்பைத் தொட்டவுடன் காதல் வருவது, கிணற்றில் நாயகனுடன் ஒன்றாக த்ரீசம்மாக குளிப்பது, கிராமத்து வாய்க்காலில் கிளுகிளு ஆடையில் குளிப்பது என  என்னென்னமோ செய்கிறார்கள். படத்தின் கடைசியில் சதா வேறு பாடல் ஒன்றுக்கு வந்த...

மூன்று சகோதரர்களின் காதல் குளறுபடிகளின் கதை! காபி வித் காதல் - சுந்தர் சி

படம்
    பி வித் காதல் இயக்குநர் சுந்தர் சி இசை யு1   மூன்று சகோதரர்களின் காதல் வாழ்க்கை குளறுபடிகள்தான் கதை. இதில் மூத்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் அவர் வேறு பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத் தயங்காத ஆள். எந்த பெண் கிடைத்தாலும் சரி, பல் விளக்காமலேயே சேட்டு போல ஜிலேபி சாப்பிட நினைப்பவர். சரவணனுக்கு லிவ் இன் உறவில் காதலி இருக்கிறாள். ஆனால் அவள் பாப் பாடகர் ஒருவரைக் காதலித்து அவருடன் சென்று விடுகிறாள்.   இளையவன் கதிர். இவனுக்கு காதல் வாழ்க்கை அல்லது கல்யாண வாழ்க்கை எதாக இருந்தாலும் சரி தனக்கு லாபமாக அமையவேண்டும் என நினைப்பவன். தன்னை விரும்பும் தோழியின் காதலைக் கூட புரிந்துகொள்ளாமல் ஹோட்டல் கட்ட இடம் கிடைக்கும் என தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். மூத்தவர் ரவிக்கு இசை பேண்ட் வழியாக பெண் ஒருவர் அறிமுகமாகி உடலுறவு கொள்கிறார்கள். இந்த பெண்ணை அவரது தம்பி சரவணனுக்கு கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறார்கள். இது ரவியை சீண்ட அவர் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார். கதிருக்கு பார்த்த பெண் ஊருக்கு வரும்போது அவருக்கு ஊரைச் சுற்றிக்காட்ட, வெளிய...