சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!
A History of Food Culture in China By Rongguang Zhao Translated by Gangliu Wang and Aimee Yiran Wang 2015 இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது. நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மத...