டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா?
cc |
ஷாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அதில் ஸ்பூன் ஒன்றை போட்டால் அது புதிய பானம் போலவே இருக்குமா?
அறிவியல் பூர்வமாக இதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. பொதுவாக குடித்துவிட்டு மீந்த பானங்களில் வெள்ளி ஸ்பூன்களை போட்டுவைத்தால் அதிலுள்ள கேஸ் போகாமல் அப்படியே இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல.
1994ஆம் ஆண்டு பேராசிரியர் ரிச்சர்ட் ஜரே என்பவர், இதுபற்றி ஆராய்ந்தார். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். 26 மதுபான சுவையை அறியும் வல்லுநர்களைக் கொண்டு சோதித்தார். இச்சோதனையில் ஸ்பூன் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் எந்தத வகையில் சுவையை ஊக்குவிக்கவில்லை என்பது உறுதியானது. மதுபானம் சுவையாக கார்பன்டை ஆக்சைடு் வாயுவுடன் இருக்கவேண்டுமா? அதனை குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள். போதும்.
டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா?
பாதிக்க வாய்ப்புண்டு. இதெல்லாம் உளவியல் சார்ந்த தன்மை. பல் மருத்துவர் அணியும் வெண்ணிற கோட், சமையல்கலைஞர் அணியும் உடை ஆகியவை அவர் செய்யும் வேலை நமக்கு மட்டுமல்ல அவருக்கும் உணர்த்தும். இதனை என்குளோத்டு காக்னிஷன் என்று கூறலாம். பைஜாமாவை இரவு அணிந்து தூங்கி பழகியிருப்பீர்கள். குழந்தையோடு விளையாடுவதற்கான உடையாகவும் அது இருக்கலாம். அதனை பணிநேரத்தில் உடுத்தி ஜூம் மீட்டிங்கில் உங்கள் உயரதிகாரி பார்த்தால், அவரே கூட உங்கள் மேல் நம்பிக்கை இழக்கலாம். ஏன் உங்களுக்கே கொடுக்கப்பட்ட வேலைகளை வேகமாக முடிக்கமுடியாதபடி மனதில் சோர்வு தோன்றலாம். காரணம், உளவியல் ரீதியாக குறிப்பிட்ட உடை அணிந்து வேலை செய்யப்பழகிவிட்டால் திரும்ப அந்நிலையை மாற்றுவது கடினம்.
சளித்தொந்தரவு ஏற்படும்போது அதற்காக தனிமைப்படுத்தலில் இருந்தால் விரைவில் சரியாகிவிடுமா?
உலகம் முழுக்க சளியை உண்டாக்குகிற 200 வகை வைரஸ்கள் உள்ளன. இரண்டு நாட்களில் உங்களை பாதித்து இருவாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவை இந்த வைரஸ்கள். ஆனால் இதற்காக தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டுமா? இருக்கமுடியுமா என்பதெல்லாம் நீங்கள் செய்யும் வேலை, செய்துள்ள சேமிப்பு ஆகியவற்றைப் பொறுத்த சமாச்சாரங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக