திருடவே முடியாத டிசைன் இது!
cc |
திருடவே முடியாத டிசைன் இது!
உலகளவில் பென்சில், பிஸ்கெட் டிசைன், பைக், கார் என பல்வேறு பொருட்களின் டிசைன்களை எளிதாக பலரும் திருடிவிடுவது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் தங்களின் நிறுவனப் பொருட்களைப் போல யாராவது டிசைன் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொருட்களின் மீதே அச்சிட்டிருப்பார்கள். போலியான பொருட்கள் அந்தளவு வேகமாக சந்தையில் பரவி வருகின்றன. இதனால்தான் தற்போது யாரும் திருடவே முடியாத காப்பி செய்ய முடியாத வடிவமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த ட்ஸூபா பல்கலைக்கழகத்தைச் சேர்நத ஆராய்ச்சியாளர்கள் இந்த புதுமையான பேட்டர்னை உருவாக்கியுள்ளனர். ஓவியங்களில் மிக நுட்பமான முறையில் பதிக்கப்படும் மைக்ரோபேட்டர்ன்களைக் கண்டுபிடிபபது கடினம். இதன்மூலம் அசல், நகல் எதுவென எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மிக சிக்கலான நிறங்களைக் கொண்டுள்ள பேடடர்ன் என்பதால் இதனை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று உறுதியாக பேசுகிறார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யோஹெய் யமமோட்டோ.
மனிதர்களின் கைரேகை எப்படி அனைவருக்கும் ஒன்றுபோல இல்லையோ, அதுபோலவே இந்த பேட்டர்ன் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்களில் பதிக்கப்படும் மை, புற ஊதாக்கதிர்கள் படும்போது ஒளிரும் தன்மை கொண்டது. whispering gallery mode (WGM) எனும் இந்த பேட்டர்ன் வகை பின்னாளில் நாம் பயன்படுத்தும் கிரடிட், டெபிட் கார்டுகளில் கூட பயன்படுத்த முடியும். இவற்றை திருடி பயன்படுத்தமுடியாது. உலகளவில் புகழ்பெற்ற ஓவியங்கள் திருடப்பட்டு வருகின்றன. இத்தகைய குறியீடு இருந்தால் அதுபோன்ற கலைச்செல்வங்கள் காணாமல் போவதைத் தடுக்கமுடியும். போலிகளை விலக்கி அசலைக் கண்டுபிடிக்கலாம்.
தகவல்: livescience
கருத்துகள்
கருத்துரையிடுக