தனிநபராக பறக்கும் வாகனங்கள் பெருகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது! - ஹோவர்போர்டு முதல் ஜெட்பேக் வரை

 

 

 

Jetpack, Rockets, Science, Future
cc

 

 

பறக்கலாமா?

ஸபாடா நிறுவனத்தின் ஜெட் ஹோவர் போர்டு மூலம் 3 ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு பறக்கலாம். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறக்கமுடியும் தன்மை கொண்டது இக்கருவி. இந்நிறுவனத்தின் ஃபிளைபோர்டு ஏர் என்பதில் டேங்கை நிரப்பினால் பத்துநிமிடங்கள் காற்றில் பறக்கலாம். அமெரிக்க ராணுவம் இந்நிறுவனத்தின் கருவிகளை பார்வையிட்டுள்ளது.

பறக்கும் கார்
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பறக்கும் கார் பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பதாக தகவல் வரும். ஆனால் நடைமுறைக்கு வராது. இனிமேல் அந்தளவு தாமதம் நடக்காது. வகானா என்ற பெயரில் ஏர்பஸ்  நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயாரித்தது. கடந்த நவம்பரில் ஏர்பஸ் நிறுவனம், பரிசோதனை முயற்சியை தொடங்குவதற்கு சரி என்று சொல்லி கட்டைவிரலை உயர்த்திவிட்டது.

துபாயில் ஏர் டாக்சியை சோதனை செய்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். காரணம் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்தான். வோலோகாப்டர் என் ஏர் டாக்சியில் இருவர் முப்பது நிமிடங்கள் பறக்கலாம். இறக்கை இல்லாமல் பறக்கலாமே என்று கூறினால், அர்பன் ஏரோநாட்டின் ஃபேன்கிராப்ட் என்ற பறக்கும் காரைத்தான் அணுக வேண்டும்.

முதலில் பறக்கவும் இறங்கவும் ரன்வே தேவைப்பட்டது. தற்போது இந்த பிரச்னைகளை மெல்ல நீக்கி வருகிறார்கள். இப்போதைக்கு நம்பிக்கையாக இருப்பது ஃபேன்கிராப்ட் பறக்கும் காரின் வடிவமைப்பும் திறனும்தான்.

தனிப்பட்ட டிரோன் பிளேன்.

113 கிலோ எடை 10 பேட்டரிகள் சக்தியில் இயங்கும் தனிப்பட்ட வருவர் செல்லும் டிரோன் பிளேன் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பயணிக்கலாம். இந்த வாகனத்திற்கு பைலட் லைசென்ஸ் ஏதும் எடுக்கவேண்டியதில்லை. மணிக்கு 32 கி.மீ வேகத்தில்தான் செல்லும். ஆனால் இதில் 20 நிமிடங்கள்தான் பயணிக்கமுடியும். அவ்வளவுதான் தாங்கும்.

ஹெலிகாப்டர்

ஸ்போர்டிவான ஹெலிகாப்டர். ஏர்பஸ் நிறுவன தயாரிப்பு. இதனை நிறுவனம் ரேசர் என அழைக்கிறது. மணிக்கு 400 கி.மீ பறக்கும் திறன் பெற்றது. எதிர்காலத்தில் ஊபர் ஓலா போல பயணிகளை ஏற்றி இறக்கும் பணிக்கு ஏற்றது என ஏர்பஸ் நிறுவனம் இதனை கருதுகிறது. அதனால்தான் காசை கொட்டி ஆராய்ச்சி செய்து வருகிறது.

கிளாசிக் விமானம்

வெப்பவாயுவைப் பயன்படுத்தி பலூன்களை பறக்கவிடுவதை படங்களில் கூட பார்த்திருப்பீர்கள். இங்கிலாந்தில் ஏர்லாண்டர் என்ற பெயரில் விமானத்தை தயாரித்துள்ளனர். ஹீலியத்தில் இயங்குவது. இதனை மாற்றி ஹைட்ரஜனில் பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சரக்கு போக்குவரத்தை இந்த முறையில் மாற்றலாமா என இங்கிலாந்து அரசு காசைக் கொட்டி வருகிறது.

ஜெட்பேக்

கிக் ஆஸ் படத்தில் கூட கிளைமேக்சில் நாயகன், வருங்கால காதலி அடிபட்டு கிடப்பாள். அவளை தூக்கிக்கொண்டு பறப்பான். அதேதான் ஜெட்பேக். உங்கள் முதுகில் நீங்கள் பறப்பதற்கான எரிபொருள் டேங்க், மெஷின்  இருக்கு்ம். அதனையும் தூக்கிக்கொண்டு பறக்கவேண்டும் என்பதுதான் கான்செப்ட். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் என்ற நிறுவனம் அரைமணிநேரம் வானில் பறக்கும் சக்தியுடன் இதனை தயாரித்துள்ளது.  மெஷின் இயங்காவிட்டாலும் பாராசூட் உங்களை காப்பாற்றும் ஆனால் சைஸ்தான் மினி கூப்பர் கார் போல இருக்கிறது. சகித்துக்கொண்டால் பறக்கலாம்.

 பிபிசி

கருத்துகள்