கிலோமீட்டர்களை கணக்குப்போடாமல் பயணம் போகலாம்! கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்

 

 

 

https://www.fresherslive.com/assets-images/news/origin/2020/09/02/tamilrockers-illegally-leaks-kilometers-and-kilometers-movie-online.jpg
கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்


 

 

கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்

ஜியோ பேபி

இசை சூரஜ் குரூப் பின்னணி சுஷ்யந்த் சியாம்

கேரளத்தில் உள்ள சொந்த ஊரில் சின்ன மோட்டார்கள், வண்டிகளை பழுத்து பார்த்து வேலை செய்து வருகிறான் ஜோஸமோன். அவனுக்கு உள்ள கடமைகளில் முக்கியமானது. தங்கைக்கு கல்யாணம் செய்வது. அதற்கு காசுவேண்டுமே? இதற்காக அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலா பயணி கேத்திக்கு ஊரைச்சுற்றிக்காட்ட அப்பச்சன், ஜோஸமோனை தேர்வு செய்து அனுப்புகிறான்.  ஜோஸமோனுக்கு ஒரே ஆசை, அவனது அப்பாவின் புல்லட்தான். அதை அவனுடைய தந்தையாக பார்க்கிறான். ஆனால் அதனை பணமுடைக்காக விற்கும் சூழலில் கேத்தியின் வருகை அதனை தடுக்கிறது. சந்தோஷமாக வண்டியில் கேத்தியை கூட்டிக்கொண்டு செல்கிறான்.

கேத்தியைப் பொறுத்தவரை வாழ்க்கையும் காசுதான் முக்கியம். காசு இருந்தால் எல்லாமே வரும் என நம்புகிறாள். ஜோஸமோனுக்கு காசும் முக்கியம். உறவுகளும் முக்கியம் என்ற எண்ணம் மனதில் வலுவாக இருக்கிறது. இந்த இருவரும் செய்யும் பயணம் இருவருக்குள்ளும் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம்.

ஜோஸமோன் ஆக டோவினோ தாமஸ், அப்பச்சன் ஆக ஜோஜூ ஜார்ஜ், கேத்தியாக இந்தியா ஜார்விஸ் ஆகியோர் நடித்துள்ளனர். எல்லோருமே படத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் ஜோஸமோன் சந்திக்கும் சன்னி முக்கியமான கதாபாத்திரம். தொண்டைவரை மது அருந்திவிட்டு மனதின் துக்கங்கள் கரைய அழுதபடி பேசுவது அழகு.

படத்தில் ஒளிப்பதிவுக்கு ஈடுகொடுத்து சூரஜ் குருப்பின் பாடல்களும் தாளமிட வைக்கின்றன. பயணம் சார்ந்த படம். அதில் உணர்வுகளையும்  நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். அதனால்தான் படத்தை ரசிக்க முடிகிறது. கலாசார வேறுபாடுகள்தான் பல்வேறு நிலப்பரப்பு சார்ந்த மக்களை ஒன்றாக இணைக்கிறது. மனித உணர்வுகள் என்பதை நிலப்பரப்பு மாறினாலும் மாறாது என்பதை அழுத்தமாக படம் பதிவு செய்திருக்கிறது.

தென்னிந்தியாவின் நவீன திரைப்படங்களில் கவனிக்கப்படும் நடிகராக டோவினோ தாமஸ் உருவெடுத்து வருகிறார் என்பதை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறோம். அக்கருத்தை வலியுறுத்துவது போலவே படமும் உருவாகியிருக்கிறது.

கிலோமீட்டர்களை கணக்குப்போடாமல் பயணம் போகலாம்!

கோமாளிமேடை டீம்

சினிமா விமர்சனம், மலையாளம், டோவினோ தாமஸ், இந்தியா ஜார்விஸ், பயணம், கலாசாரம்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்