மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது! - புதிய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்
பிக்சாபே |
2019ஆம் ஆண்டில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நடந்துள்ளதை ஆய்வுகள் கூறியுள்ளன. 2009ஆம் ஆண்டில் 109 முதல் 10.4 என்ற அளவில் இருந்த தற்கொலை அளவு நடப்பில் 9.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இருக்கும் மாநிலங்களிலேயே சிக்கிமில் 33.1 சதவீத தற்கொலை நடைபெற்று வருவதால் முதலிடத்தைபை் பெற்றுள்ளது. குறைவான தற்கொலை நடக்கும் மாநிலமாக பீகார் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் அந்தமான் தீவு 45 சதவீத தற்கொலையுடன் முதலிடத்தில் உள்ளது. தற்கொலைகள் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒன்று குடும்ப பிரச்னைகள் காரணமாக நடைபெறுகிறது. அடுத்த முக்கியமான காரணமாக வங்கியில் வாங்கும் கடன், திவால் பிரச்னை உள்ளது. குடும்ப பிரச்னை, நோய், கடன், போதைப்பொருட்கள், மது பயன்பாடு ஆகியவை அடுத்தடுத்த முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள் அதிகளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மணமான பெண்கள் தற்கொலை செய்துகொள்வது 2009இல் 19.7 சதவீதமாக முன்னர் இருந்து இப்போது குறைந்துள்ளது. ஆனால் மாணவர்களின் தற்கொலை சதவீதம் 2009இல் இருந்து 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
பத்து லட்சம் மக்கள் வாழும் இந்திய நகரங்கள் 53இல் தற்கொலை சதவீதம் முன்னர் கொல்கத்தாவில் அதிகமாக இருந்தது. ஏறத்தாழ 41.1 சதவீதம். இப்போது அந்த இடத்தை சென்னை பெருநகரம் பிடித்துள்ளது. இங்கு நடைபெறும் தற்கொலை சதவீத அளவு 28.3 சதவீதம். அடுத்தடுத்த இடங்களை பெங்களூரு, டில்லி, மும்பை ஆகியவை பிடித்துள்ளன.
படிக்காதவர்களை விட பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களே அதிகளவு தற்கொலை செய்துகொள்வது தெரியவந்துள்ளது.
டைம்ஸ்
ரீமா நாகராஜன்
கருத்துகள்
கருத்துரையிடுக