டாஸ்க்கை முடிக்க ரோபோக்களுடன் ராணுவ வீரர்கள் உரையாடலாம்! - செயற்கை நுண்ணறிவில் இது புதுசு!

 

 

 

Robot, Mech, Machine, Technology, Urban, Ai
cc

 

 

 

ராணுவ கூட்டாளியாகும் செயற்கை நுண்ணறிவு!


 அமெரிக்க ராணுவ அமைச்சகம், ராணுவ வீரர்களுடன் பேசும் தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கியுளளனர்.


அமெரிக்காவின் ராணுவப்பிரிவும், சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் சேர்ந்து செய்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.. அமைப்பு மூலம் வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ராணுவத்திற்கு செலவுகள் குறைய வாய்ப்பிருக்கிறது. அடுத்து, இந்த ஏ.. மூலம் வீரர்கள் உரையாடியபடி பயிற்சி செய்வதனால், செயற்கை நுண்ணறிவை எளிதாக புரிந்துகொண்டு பணியாற்ற முடியும். எதிர்காலத்தில் ஏ.. பெருமளவு ராணுவத்தில் செயல்பாட்டிற்கு வரப்போகிறது. அதனைப் புரிந்துகொணடு அதற்கேற்ப எளிதாக செயல்படலாம். தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு சாதனங்களை விட அடுத்த தலைமுறைக்கான ஏ.. சாதனங்கள் தானியங்கி முறையில் செயல்படக்கூடியவை. அதனை வீரர்கள் எளிதாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே கடினமான ராணுவப்பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.


''கடல், நிலம், ஆகாயம் என எந்த இடத்தில் ராணுவ வீரர்கள் செயல்பட்டாலும் அவர்களுடைய தகவல்தொடர்பு முக்கியமானது. அதனை நாங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியப்படுத்தி அதிநுட்ப தானியங்கி ஆயுத அமைப்புகளோடு தொடர்புகொள்ளச் செய்கிறோம் என்கிறார் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் மேத்யூ மார்கே. ட்ரோன்களை ஒரு வீரர் இயக்குகிறார் என்றால் அதனுடன் உரையாடி, அதனை அவரின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்த முடியும். களத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை ட்ரோனும் ராணுவ வீரருடன் பகிர்ந்துகொள்ளும். இனி வரும் ராணுவப் போர்கள் இம்முறையில்தான் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு இதைப் படித்ததும் அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டெண்ட் ஆகிய டிஜிட்டல் உதவியாளர்கள் இப்படித்தானே செயல்படுகின்றன என்று தோன்றும். இவை பயனரின் விருப்பங்களைப் பெற்று மேக கணினியகம் மூலம் பல்வேறு விஷயங்களைத் தேடி அலசி ஆராய்ந்து முடிவுகளைத் தருகின்றன. ஆனால் போர்க்களததில் இணையத்தில் செயற்கை நுண்ணறிவு கருவி இணைந்திருப்பது ஆபத்தானது. எனவே, ஜூடி(Joint understanding and dialogue interface) என்ற இந்த அமைபபு குறிப்பிட்ட கட்டளை வாக்கியங்களை அடிப்படையாக கொண்ட தகவல்தளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு நேரும் தவறுகள் ஏராளமானோரின் உயிரைப் பலிகொள்ளும் என்பதால் கவனமாக செயல்படுவது அவசியம். ஜூடி, மனிதர்களின் கட்டளைகளை வாங்கி அதனை ரோபோக்களுக்கு அனுப்புகிறது.இதன்மூலம் வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்படமுடியும். தற்போது ஜூடி, மனிதர்களிடமிருந்து ஏராளமான தகவல்களைப் பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இதன் செயல்பாடுகள் வரும் செப்டம்பர் மாதம் சோதிக்கப்படவிருக்கிறது. '''ஒருவரைத் தேடி காபபாற்றுகிற பணியில் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் ராணுவ வீரர்களின் பணி இன்னும் எளிதாகும். ' என்கிறார் ஆராய்ச்சியாளர் மேத்  

New atlas








கருத்துகள்