டிஸ்கவரி சேனலைப் பிரபலப்படுத்த இந்திய பிரபலங்களை பயன்படுத்திய சாமர்த்தியசாலி! மேகா டாடா

 

 

 

Megha Tata on transforming Discovery, TRAI tariff order ...
மேகா டாடா

மேகா டாடா
தெற்காசிய இயக்குநர், டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்

ஊடக நிறுவனங்கள் சார்ந்து மேகா டாடா, 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஹெச்பிஓ, டர்னர் இன்டர்நேஷ்னல், ஸ்டார் டிவி  ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய நிகழ்ச்சி ஒளிபரப்பாளர்களின் பௌண்டேஷன் போர்டு தலைவராகியுள்ளார். எம்மிஸ், புரோமேக்ஸ், குழந்தைகளின் திரைப்படவிழா, கோல்டன் மைக்ஸ் விழா, உலக பெண் விற்பனையாளர் விருது என பல்வேறு விருது வழங்கம் நிகழ்ச்சிகளுக்கு தேர்வுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இம்பேக்ட் 50 விருதுக்கு எப்போதும் தேர்வாகிற ஊடகப்பெண்மணி மேகா என்று தாராளமாக சொல்ல முடியும்.

டிஸ்கவரி சேனல் பல்வேறு தகவல்களை மனிதர்களுக்கு தருவது. அந்த வகையில் டிவியில் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை உருவாக்கி சந்தையில் 54 சதவீதத்தைப் பெற வைத்தது மேகாவின் சாதனை. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களைப் பங்கேற்கச்செய்து டிவியின் பெருமையையும் வருமானத்தையும் உயர்த்தினார். 43 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் டிவி ஒன்றுக்காக ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்