நகரை தனது இதயம் போல பாதுகாக்கும் சிட்டி ஹன்டர் குழு! சிட்டி ஹன்டர் அனிமேஷன் தொடர்
சிட்டி ஹன்டர் |
சிட்டி ஹன்டர்
written and illustrated by Tsukasa Hojo.
Directed by | Kenji Kodama |
---|---|
Studio | Sunrise |
Licensed by | |
Original network | Yomiuri TV |
ஜப்பானில் அதிநவீன நாகரிக நகரம். அங்கு எக்ஸ்ஒய்இசட் என்று ஒரு அமைப்பு. இந்த அமைப்புக்கு காவல்துறை சார்ந்த பெண் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் வருவது உண்டு. இவை எல்லாம் வழக்குகளாக பதிவு செய்யமுடியாத சிக்கல்களைக் கொண்டவை. அவற்றையெல்லாம் பட்டி டிங்கரிங் பார்த்து ஆட்களின் தாடையைப் பெயர்த்து முதுகுத்தோலை உரித்து பிரைவேட்டாக நீதியை நிலைநாட்டுபவன் ரியோ. அவன்தான் அந்த அமைப்பின் தூண். அவனுக்கு உதவியாக அவனை உயிருக்குயிராக காதலிக்கும் சுத்தியல் காதலி கோமாரா இருக்கிறாள்.
இவர்களின் அசைன்மென்டுகளை கவனித்து கொடுப்பது கேட்ஸ் ஐயிலுள்ள இருவர். இந்த நால்வரும் நகரில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படாதவண்ணம் காத்து வருகின்றனர். அப்போது அங்கு பல்வேறு தொழில்களை செய்யும் கெஞ்சி என்பவன் வருகிறான். அவன் கோமாராவின் பள்ளித்தோழன். அவன் தகுதிக்கு கீழே உள்ள கோமாராவை காதலிக்கிறான். அது எதற்கு என்பதுதான் கதை.
ஜப்பானிய அனிமேவைப் பொறுத்தவரை சீரியசான கதை இருந்தாலும் அதிலும் காமெடிகளை உள்ளே கச்சிதமாக பொருத்திவிடுவார்கள். இங்கும் அதுதான் நடக்கிறது. ரியோ அடிதடி மன்னனாக எதையும் நொடியில் புரிந்துகொள்பவனாக இருந்தாலும் பெண்களை கழுத்து கீழே மட்டும் 10 நொடி உற்றுப்பார்க்கும் பழக்கம் கொண்டவன். படம் முழுக்க இவருக்கும் கோமாராவுக்கும் நடக்கும் சண்டை இதற்காகவேதான். இவர்கள் இருவரின் பொருத்தம் அபாரமாக இருக்கிறது. குறிப்பாக கல்யாண கவுனில் அனைவரும் நீ சூப்பரா இருக்கே என்று சொல்லுகிறார்கள். கோமாரா நேராக ரியோவிடம் வந்து அவன் கருத்தைக் கேட்கும் காட்சி.
கெஞ்சியிடம் பழகும்போது கோமாராவுக்குள் ஏற்படும் குற்றவுணர்வு இதனையும் நன்றாக படமாக்கியிருக்கிறார்கள். உணர்வுரீதியாக நம்மை அனிமேஷன் படம் பார்க்க வைக்க இதுபோல நிறைய சமாச்சாரங்கள் படத்தில் உள்ளன.
இவையன்றி, போர் வெறியர்கள் அந்நகருக்கு ஏற்படுத்தும் பேராபத்ததை ரியோசைபர் டீம் எப்படி தடுக்கிறது என்பதை அனிமேஷனில் மிரட்டி சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்றரை மணி நேரம் படம் என்பதால் நேரத்தை வீணாக்குகிறது என கவலைப்படவேண்டியதில்லை. யூடிபில் படம் கிடைக்கும். வாய்ப்பு கிடைப்பவர்கள் பாருங்கள்.
ரணகள கில்லாடி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக