உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்! - அமெரிக்கா தயங்குவது ஏன்?
உணவுகளில் எச்சரிக்கை லேபிள் அமெரிக்காவில் உணவுப்பொருட்களில் எச்சரிக்கை லேபிள்களை ஒட்டி விற்க எஃப்டிஏ அமைப்பு யோசித்து வருகிறது. அமெரிக்கர்கள் ஏராளமான குப்பை உணவுகளை வகைதொகையின்றி உண்பதால் உடல்நலம் கெட்டு வருகிறது. இதை சரி செய்ய அமெரிக்க அரசு யோசித்து வருகிறது. இந்த எச்சரிக்கை லேபிளில் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் இருக்கும். எப்போதும் போல அமெரிக்க நிறுவனங்கள், லேபிள் போடச்சொன்னால் குப்பை உணவுகளின் விலைகளை ஏற்றுவோம் என்று கூறியுள்ளன. ஆனால் நிறுவனத்தின் லாபம் தாண்டி உடல்நலம் பற்றி யோசித்தால் அமெரிக்காவில் உள்ள சிறார்கள், இருபது சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை 1970ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு கணக்குப் போட்டு கூறுகிறார்கள். உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ, லேபிள்களில் பச்சை சிவப்பு மஞ்சள் ஆகிய நிறங்களை பயன்படுத்தி உடலுக்கு நேரும் ஆபத்தை கூறுவது அல்லது உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக உள்ளது என நேரடியாக கூறுவது என இரண்டு லேபிள் திட்டங்களை யோசித்து வருகிறது. சிலி நாட்டில் உணவுப்பொருட்களில் உள்ள பகுதிப்பொருட்கள் சார்ந...