இடுகைகள்

ஸ்காட்லாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிரச்சேதம் செய்யப்பட்ட மன்னர் சார்லஸ்! - யுனைடெட் கிங்டம்

படம்
  யுனைடெட் கிங்டம் இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. சுருக்கமாக, யுகே. இங்கிலாந்து என்றும் கூட கூறலாம். 1707ஆம் ஆண்டுதான் இங்கிலாந்திற்கு முதன்முதலில் யுனைடெட் கிங்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. மே 1 ஆம் தேதி வைக்கப்பட்ட இப்பெயருக்கு முக்கியமான காரணம் உண்டு. இந்த தேதியில்தான், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தோடு ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்றமும் இணைக்கப்பட்டது. இதற்கு ஆக்ட்ஸ் ஆப் யூனியன் என்று பெயர்.  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளும் 1706, 1707 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு கொள்கைகளை வெளியிட்டு நாடாளுமன்றத்தை ஒன்றாக இணைத்தன. 1603ஆம்ஆண்டு மார்ச் 24ஆம் தேதி, முதலாம் எலிசபெத் ராணி மறைந்தார். அந்த ஆண்டு முதலே இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளின் நாடாளுமன்றமும் இணைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.  எலிசபெத் ராணிக்கு குழந்தை இல்லை. எனவே, ஸ்காட்லாந்து நாட்டிலிருந்த அவரது சகோதரர் ஆறாம் ஜேம்ஸ் இங்கிலாந்து நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளுக்கும் மன்னராக இருந்தார்.  1625ஆம் ஆண்டு ஜேம்ஸ...

176 பிறந்த தினத்தை கொண்டாடும் அறிவியலாளர்! - அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

படம்
  பெல், அறிவியலை நாடியது அவருடைய அம்மாவுக்காகத்தான். அவருக்கு காது கேட்பதில் பிரச்னை இருந்தது. இதனை சரிசெய்யவே அறிவியலில் தீர்வுகளை தேடிக்கொண்டிருந்தார். அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் அப்பா, குரல்வளையின் அமைப்பு போன்ற இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இதனை விசிபிள் ஸ்பீச் என்று பெயரிட்டு அழைத்தார்.  பெல், பல்வேறு அறிவியல் சமாச்சாரங்களை தன் அப்பாவிடமிருந்து தான் கற்றுக்கொண்டார். 1870ஆம் ஆண்டு பெல்லின் குடும்பம் கனடாவிற்கு சென்றது. பெல் தொடர்ந்து காது கேளாமை பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதுபற்றி பிறர் கற்க பள்ளி ஒன்றைத் திறந்தார். பேச்சு நுட்பம், குரல் அமைப்பு முறை என்பதுதான் இதன் பெயர். 1872இல் பாஸ்டன் நகரில் இந்த பள்ளியைத் தொடங்கி நடத்தினார்.  காது கேளாமைக்கான ஆராய்ச்சியின்போதுதான் தகவலை கருவிகள் வழியாக அனுப்பினால் என்ன என்று தோன்றியது. இதற்கான ஆராய்ச்சிகளையும் செய்யத் தொடங்கினார். 1876ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, பெல்லும் அவரது உதவியாளருமான தாமஸ் வாட்சன் ஆகிய இருவரும் டிரான்ஸ்மீட்டர் வழியாக தகவல் ஒன்றை அனுப்பினர். பக்கத்து அறைக்கு அனுப்பிய தகவல் இதுதான். மிஸ்டர் வாட்...

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தோழன் யார்?

படம்
அட்லஸ் அப்ஸ்குரா ஸ்காட்லாந்தின் ஆர்க்னேயில் புதுமையான தொல்பொருள் புதுமை அரங்கேறியுள்ளது. தொல்பொருள் படிமத்திலிருந்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த நாயின் முகத்தை புதுப்பித்து வடிவமைத்துள்ளனர். மனிதனோடு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நண்பனாக புழங்கி வரும் அடிமை விலங்கு நாய் மட்டுமே. காலத்திற்கேற்ப மனிதர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் மட்டுமே நாய் தாக்குப்பிடித்து வாழ்கிறது. இதைப்போல மற்றொன்றைக் குறிப்பிடலாம். பறவைகளில் அது காக்கை. ஐரோப்பிய சாம்பல் ஓநாயை ஒத்த உடல் அமைப்பைக் கொண்ட நாய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் குவீன் கைர்ன்  எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நாயின் மண்டை ஓடு தொடர்பான படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டது. மேற்சொன்ன இடத்திலுள்ள கல்லறையில் நிறைய நாய்களின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா