சிரச்சேதம் செய்யப்பட்ட மன்னர் சார்லஸ்! - யுனைடெட் கிங்டம்

 











யுனைடெட் கிங்டம்

இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. சுருக்கமாக, யுகே. இங்கிலாந்து என்றும் கூட கூறலாம். 1707ஆம் ஆண்டுதான் இங்கிலாந்திற்கு முதன்முதலில் யுனைடெட் கிங்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. மே 1 ஆம் தேதி வைக்கப்பட்ட இப்பெயருக்கு முக்கியமான காரணம் உண்டு. இந்த தேதியில்தான், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தோடு ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்றமும் இணைக்கப்பட்டது. இதற்கு ஆக்ட்ஸ் ஆப் யூனியன் என்று பெயர். 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளும் 1706, 1707 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு கொள்கைகளை வெளியிட்டு நாடாளுமன்றத்தை ஒன்றாக இணைத்தன. 1603ஆம்ஆண்டு மார்ச் 24ஆம் தேதி, முதலாம் எலிசபெத் ராணி மறைந்தார். அந்த ஆண்டு முதலே இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளின் நாடாளுமன்றமும் இணைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. 

எலிசபெத் ராணிக்கு குழந்தை இல்லை. எனவே, ஸ்காட்லாந்து நாட்டிலிருந்த அவரது சகோதரர் ஆறாம் ஜேம்ஸ் இங்கிலாந்து நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளுக்கும் மன்னராக இருந்தார். 

1625ஆம் ஆண்டு ஜேம்ஸ் இறந்தபிறகு, அவரது மகன் முதலாம் சார்லஸ் பதவிக்கு வந்தார். இவர், தனக்கான அதிகாரம் அதிகமாக இருக்கவேண்டுமென நினைத்தார். இதனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பறித்தார். இதன் காரணமாக, இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதன் விளைவாக, சார்லஸ் மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்தன. அனைத்து முக்கியமான அதிகாரங்களும் நாடாளுமன்றத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள், கட்சிகள் ஒப்புக்கொண்டன. இந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில், ஸ்காட்லாந்தின் மன்னர்கள் யாரும் அதிகாரத்தில் இல்லை. பின்னாளில் மன்னர்களுக்கு அதிகாரம் கிடைத்தாலும் நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. கிரேட் பிரிட்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டரில் இங்கிலாந்து நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இருநாடுகளுக்கான அவை இதுவே. 


டெல் மீ வொய் இதழ் 

 


கருத்துகள்