இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய பாலூட்டி!
இந்தியாவின் விலங்கியல் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் (ZSI), புதிய பாலூட்டி இனத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்கு (White Cheeked Macaque) தான் அது. சீனாவில் 2015ஆம் ஆண்டு இந்த மக்காவ் குரங்கினத்தைக் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவில், அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சா மாவட்டத்தில் மக்காவ் குரங்கினத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள். சீனாவுக்கும் இந்த இடத்திற்குமான தொலைவு 200 கி.மீ. ஆகும்.
இதுபற்றிய கட்டுரை, சர்வதேச ஆய்விதழான அனிமல் ஜீனில் வெளியாகியுள்ளது. ”இப்போது நடந்துள்ள கண்டுபிடிப்பு என்பது தற்செயலான விபத்து. இமாலயத்தில் உள்ள தாவர இனங்கள், விலங்கினங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அதில்தான் குரங்கினத்தைப் பற்றி தகவல் கிடைத்தது” என்றார் அறிவியல் ஆராய்ச்சியாளரான மருத்துவர் முகேஷ் தாக்கூர்.
இந்த ஆய்வுக்குழுவினர் அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மக்காவ் குரங்கினத்தையும், சிவப்பு பாண்டாவையும் தேடி வந்திருக்கின்றனர். ஆய்வில் கிடைத்த கழிவு, தோல் மாதிரிகளை ஆய்வகத்தில் டிஎன்ஏ சோதனை செய்தனர். அதில்தான் கிடைத்த மாதிரிகள், வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்குடையது என அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்கிற்கு, கழுத்தில் நீளமான முடி இருக்கும். வாலும் பிற மக்காவ் குரங்குகளை விட நீண்டிருக்கும். இந்த அடையாளங்களை வைத்து இதனை அடையாளம் காணலாம்.
சோதனை முடிவுடன், அங்கிருந்த கேமராவையும் ஆய்வுக்குழு சோதித்தது. அதில், மக்காவ் குரங்கை கிராமத்தின் வேட்டைக்காரர் ஒருவர் சிறைப்பிடித்து வைத்திருப்பதை அறிந்தனர். அஞ்சாவ் மாவட்டத்திலுள்ள பழங்குடிகள், பல்லாண்டுகளாக காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். புதிய குரங்கு இனத்தை கண்டறிந்திருப்பதால், இந்தியாவில் உள்ள பாலூட்டி இனங்களின் எண்ணிக்கை 438 ஆக அதிகரித்துள்ளது.
சிறிய விலங்கினங்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தாலும் பெரிய விலங்கினங்களை புதியாக கண்டறிவது அரிதானது. அதனை இந்திய உயிரியல் ஆய்வாளர்கள் சாதித்துள்ளனர். இமாலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருணாசலப் பிரதேசத்தில் வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்கு, வேறு இனத்தைச் சேர்ந்த மக்காவ் குரங்கும் ஒருங்கே வாழ்வது ஆச்சரியமானது. இது, அங்கு நிலவும் பல்லுயிர்த்தன்மைக்கு சாட்சி.
தகவல்
meet indias newest mammal white cheeked macaque
indian express 9.2.2022
கருத்துகள்
கருத்துரையிடுக