சின்னம்மை ஒழித்த 42ஆவது ஆண்டு! - எட்வர்ட் ஜென்னரின் மகத்தான தடுப்பூசி கண்டுபிடிப்பு

 








இன்று இரண்டு விஷயங்கள் உலகில் நடக்கின்றன. ஒன்று, நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒரு பிரிவும், அதைப் போடக்கூடாது அப்படி போடுவதும் போடாததும் மக்களின் விருப்பம் எனவும் ஒரு பிரிவு பேசிக்கொண்டிருக்கிறது. எலன் மஸ்க் என்ன சொல்கிறார் என்றால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்தான். அதை ஊக்கப்படுத்தலாம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார். இந்த வகையில் இந்த விவாதத்திற்கு முக்கியமான காரணம், எட்வர்ட் ஜென்னர். 

இவர்தான் தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர். 1749ஆம் ஆண்டு மே 17 அன்று இங்கிலாந்தில் உள்ள பெர்க்கிலியில் பிறந்தார்.  இவரின் காலத்தில் சின்னம்மை பலருக்கும் அதிகரித்து அதற்கான சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நிறையப் பேர் இறந்துகொண்டிருந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால், மக்கள் தொகையில் இருபது சதவீதம் பேர். 

ஜென்னர் தனது ஆராய்ச்சியில் ஒரு த த்துவத்தை உருவாக்கினார். ஒருவருக்கு சின்னம்மை வந்தும் கூட உயிர்பிழைத்து விட்டாரா? உடனே அவரைத் தேடிப் பிடித்து சோதித்தால் அவரது உடலில் நோய்க்கு எதிரான பொருட்கள் இருக்கும் என்று கூறினார். இந்த நேரத்தில் சில மருத்துவர்கள் நடைமுறை சோதனையில் கூட இறங்கியிருந்தனர். எப்படி? ஹோமியோபதி வழியில்தான். விஷத்திற்கு விஷமே தீர்வு என துணிந்து சற்று ஆற்றல் குறைந்த சின்னம்மை வைரஸை உடலில் செலுத்தி என்ன செய்கிறது என பார்ப்பது. பாதிப்பு அதிகமானால் நோயாளி செத்துவிடுவார். அதனால் என்ன நமக்கு தேவை முடிவுதான் என துணிந்தனர். இந்த சோதனைக்கு வேரியோலேஷன் என்று பெயர். 

இந்த நேரத்தில் ஜென்னர் அறுவை சிகிச்சை வல்லுநராவதற்கான வேகத்தில் இருந்தார். அப்போது, அவர் பசு அம்மையில் இருந்து மீண்ட பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றது 1796இல். பசு அம்மையிலிருந்து மீண்ட பெண்ணின் உடலில் உள்ள பசு அம்மை கிருமியை எடுத்த சின்னம்மை பாதித்த குழந்தைக்கு ஜென்னர் செலுத்தினார். தொடக்கத்தில் சின்னம்மை தீவிரமானது போல தோன்றினாலும் விரைவில் குழந்தை குணம் பெற்றது. பின்னாளில் அந்த குழந்தையை சின்னம்மை தாக்கவில்லை. லத்தீனில் வேக்சினியா என பசு அம்மையை அழைத்தனர். எனவே, தனது முறைக்கு வேக்சினேஷன் என பெயர் வைத்தார் ஜென்னர். இதன் அடிப்படையில்தான் டெட்டனஸ், டிப்தெரியா, ரேபிஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. 

நோய்தடுப்பியலின் தந்தை என்று எட்வர்ட் ஜென்னரை அழைக்கிறார்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1980இல்தான் சின்னம்மை முழுமையாக அழிந்தது என கூறியிருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு நாம் இந்த மருத்துவ சாதனையின் 42ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். 

டெல் மீ வொய் இதழ் 

 pinterest


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்