இடுகைகள்

மாற்றுப்பாலினத்தவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி கிளிஷேக்கள் மாறவேண்டும்! - விவேக் தெஜூஜா

படம்
நேர்காணல் விவேக் தெஜூஜா ஓரினச்சேர்க்கையாளர் பற்றி நிறைய சுயசரிதைகள் இன்று வருகின்றன. இதன் பிரயோஜனம் என்ன? மக்களின் சிந்தனைகளை மாற்றும் என நம்புகிறீர்களா? டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு 377 சட்டத்திருத்தம் பற்றி வந்ததும் நான் எழுதிய நூல் இது. ஆனால் இதனை பதிப்பிக்க பதிப்பாளர்களை அணுகியபோது, அவர்கள் இதில் ஆபாசமான கிராபிக் படங்கள் உள்ளன என்று கூறிவிட்டனர். நான் அடுத்த பதிப்பாளரிடம் நகர்ந்துவிட்டேன். இப்படியே நிராகரிப்புகளாக சென்று கொண்டிருந்தது . இன்று நீங்கள் கேட்டதுபோல் சொற்களைத்தான் நான் அதிகம் கேட்கிறேன். ஆனால் இன்று இவை இம்முறையில் அதிகம் பேசப்பட்டாலும், நாளை நிலைமை மாறும். சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரின் குரலும் கேட்கும். அதற்கு நூல்கள் முக்கியமான வழியாக கருதுகிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். அதாவது உங்களது பாலினத் தன்மையை ஏற்காதது பற்றி...  இன்று நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா? நான் என் குடும்பத்தை விட்டு பதினெட்டு வயதில் வெளியேறினேன். அப்போது எனக்கு பிடித்த ஒன்றை மறுக்கிறார்களே என்று கடுமையான வெறுப்பும் விரக்தி...

மாற்றுப்பாலின சாதனையாளர்கள் நூல் தரவிறக்க முகவரி!

படம்
இந்த நூலை தினகரன் நாளிதழில் பணியாற்றும் போதே எழுத தொடங்கினேன். ஆனால் சாத்தியம் ஆகவில்லை. காரணம் கடுமையான பணிச்சுமை. இன்றும் நான் நிதானமாக உட்கார முடியவில்லைதான். ஆனால் முன்பை விட தெளிவாக எழுதுவதற்கான நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு வரையறுத்துவிட்டேன். எனவே இனி பிரச்னையில்லை. மொத்தம் இருபது மாற்றுப்பாலினத்தவர் இந்த நூலில் உள்ளனர். விபச்சாரம், பிச்சை என இரண்டையும் தவிர்த்துவிட்டு தனக்குப் பிடித்த தொழிலைச் செய்துகொண்டு வாழ்கின்றவர்கள் இவர்கள். எனவே இந்த தன்னம்பிக்கை மாற்றுப்பாலினத்தவருக்கு வரவேண்டும் என்பதே என் ஒரே நம்பிக்கை. ரயிலில் பணத்தை அடித்து பிடுங்குவது, தன் அந்தரங்க இடத்தை சேலையை தூக்கிக் காட்டி அவமானப்படுத்துவது என வாழும் மாற்றுப்பாலினத்தவர்கள்  சிலர், அப்பிரிவினருக்கே களங்கமாக இருக்கிறார்கள். இங்கு சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது உண்மை. அவரவருக்கான இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் இழிவைத் தேடித்தருவது நியாயமும் இல்லைதானே! வாழ்வதற்கான நம்பிக்கை அணுவளவேனும் அவர்களுக்கு கிடைத்தால் போதும். அந்த நம்பிக்கையில் இந்த நூலை மொழி...

மக்களின் கவனத்தை சர்ச்சைகளால் ஈர்த்த போராட்டக்காரி! - சில்வியா ரிவேரா

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 2 உரிமைக்காக குரல் கொடுத்த சர்ச்சைப் போராளி! சில்வியா ரிவேரா அமெரிக்காவில் பிறந்த லத்தீன் நாட்டுக்காரர். அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவருக்கான அமைப்பை உருவாக்க முயற்சித்தவர். 1951 ஆம் ஆண்டு பிறந்தவர், 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் வீடற்ற மக்களுக்காக கோரிய காப்பக வசதி கோரிக்கை முக்கியமானது. நியூயார்க் நகரில் இதற்காக பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். வெனிசுலா நாட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவரின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரின் தந்தை இவரின் மூன்று வயதிலேயே சில்வியா ரிவேராவைக் கைவிட்டுச்சென்றுவிட்டார். இவரது தாய் தற்கொலை செய்துகொண்டுவிட, காப்பாற்றி வளர்த்தது வெனிசுலாவில் வாழ்ந்த பாட்டிதான். ஆனால் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாக உணர்ந்தவர், லிப்ஸ்டிக்கை எடுத்து பூசி பவுடர் போட்டு அழகு பார்த்தார். ஆனால் அது மரபு வழியில் வளர்ந்த பாட்டிக்கு பிடிக்கவில்லை. கேட்டுப்பார்த்தும் சில்வியாவுக்கு பாட்டி வழியில் வளரமுடியவில்லை. எனவே பாட்டி வீட்டை விட்டு துரத்த, பதினொரு வயதில் தெருவில் வாழ்க்கை தொடங்கியது. ஆணோ, பெண்ணோ வயிறு ஒன்றுதானே?...

பிறர் என்னைப் பின்பற்றவேண்டும் என ஆசைப்பட்டேன்! - லாவெர்னே காக்ஸ்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! இசைக்குயில் நான் - லாவெர்னே காக்ஸ்  ஆங்கில ஊடகங்களில் அதிகம் தென்படும் புகழ்பெற்ற மாற்றுப்பாலினத்தவர் லாவர்னே. இவரின் சமூக வலைத்தளக் கணக்கு முழுவதும் மாற்றுப்பாலினத்தவராக எப்படி சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடித்தேன் என்பதைப் பற்றிய சிறுசிறு பதிவுகள் உள்ளன.  அவை படிப்பவர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர்களின் மீது கரிசனத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. டைம் வார இதழில் இடம் பிடித்த முதல் மாற்றுப்பாலினத்தவர், லாவர்னே காக்ஸ்தான்.  மேலும் டிவியில் ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் எனும் டிவி தொடர் உட்பட பல்வேறு ஊடகத் தொடர்களில் பங்கேற்று சாதனை செய்துள்ளார். மேலும் டே டைம் எம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவரே. மாற்றுப்பாலினத்தவருக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் லாவர்னே நடித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இவரது தாய் கருப்பினத்தவர்களின் வரலாற்று நூலை வாங்கிப் படிக்க கொடுத்துள்ளார். அதில் அவருக்குப் பிடித்தது, ஓபரா பாடகரான லியோன்டைன் பிரைஸைத்தான். ”எனக்கு அவரின் டர்பன், உதடுகள், பெரிய உதடுகள் என என்னை அவராக கற்பனை செ...