இடுகைகள்

சார்ஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் மின் வாகனங்கள் பரவலாக மாறாததற்கு காரணம்!

படம்
  மின் வாகனங்களை நகரம் தொடங்கி கிராமத்தில் வசதியானவர்கள் வரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகமென்றாலும் தவணைக்கு வாங்கி ஓட்டுகிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை இப்படி ஓட்டுவது புதிய அந்தஸ்தாக மாறிவிட்டது.   மின்வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவுக்கு இன்னும் புழக்கமாகவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டாக மின் வாகனங்களின் வளர்ச்சி நடந்துவருகிறது. ஆனாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. பரவலாவதைத் தடுக்கும் சில காரணிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அவற்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.   மின்வாகனங்கள் குறிப்பாக கார்கள் இன்று வலிமையாக தயாரிக்கப்படுகின்றன. மக்களும் அதை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் கார்கள் இத்தனை கி.மீ. தூரம் செல்லும் என கணக்குப் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த கணக்கு உண்மையா என்றால் அதை பருவநிலைதான் தீர்மானிக்கும். மேற்குநாடுகளில் உறைபனி கொட்டும் காலங்களில் மின் வாகனங்களின் திறன் முப்பது சதவீதம் குறைந்துவிடுகிறது. பயணிகள் வாகனம் என்றால் அதற்கான ஆற்றலை எளிதாக சேமிக்கலாம்.   ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்டு சமாளித்துவிடலாம்.