இடுகைகள்

மாநில அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அரசுகள்தான் ஆயுர்வேத மருத்துவத்தின் புனித தன்மையை கெடுத்துவிட்டன! - தியோபுஜாரி, இந்திய மருத்துவத்துறை

படம்
            மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறியுள்ளது . இதனை அலோபதி மருத்துவர்கள் எதிர்க்கி்ன்றனர் . கூடுதலாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா என மக்களும் குழப்பத்தில் உள்ளனர் . இதுபற்றி மத்திய அரசின் இந்திய மருத்துவமுறைகள் கௌன்சில் தலைவர் வைத் ஜெயந்த் தியோபுஜாரி கூறுகிறார் . அறுவை சிகிச்சை பற்றிய மத்தி அரசின் புதிய அறிவிப்பு எதற்கு ? 1979 ஆம் ஆண்டு ஆயுர்வேத படிப்பின் முதுகலைதொடர்பாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டன . 2016 ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தெளிவிற்காக கூறப்பட்டது . விதிமுறைகள் முன்னமே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருபவைதான் . நாடெங்கும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடைமுறைப்படுபப்பட்டால் அதனை எப்படி கண்காணிப்பீர்கள் ? நாங்கள் கடுமையாக விதிகளை வகுத்துள்ளோம் . கல்லூரியில் குறிப்பிட்ட தர அளவுகோல் கடைப்பிடிக்கப்படாதபோது நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை . கடந்த ஆண்டு நாங்கள் இம்முறையில் 106 கல்லூரிகளுக்கு இளநிலைப்படிப்பிற்கான அனுமதியை வழங்கவில்லை . அறுவைசிகிச்சையாள

மத்திய அரசு மாநில அரசுகளுக்கான நிதியை உடனே அளிக்க வேண்டும்! - பிரனாப் சென், பொருளாதார நிலைக்குழு புள்ளியலாளர்

படம்
      நேர்காணல் பிரனாப் சென் பொருளாதார புள்ளிவிவர நிலைக்குழு தலைவர் . அரசு மூன்றாவது முறையாக நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது ? இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் உள்ளது . கடந்தாண்டு மட்டும் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது . வரி வருவாயில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது என தோராயமாக மதிப்பிடலாம் . பிற இழப்பு தொழில்துறை , நிறுவனங்கள் சார்ந்த இழப்பாக கூறலாம் . இயல்பு நிலைக்கு திரும்ப இழந்த இழப்புகளை சரி செய்யவேண்டியது அவசியம் . தற்போது மெல்ல நிலை மீண்டு வருகிறது கடந்த மூன்று மாதங்களாக சில்லறை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது . காரணம் , மக்கள் கடந்த சில மாதங்களாக எதையும் செலவு செய்ய அனுமதிக்கப்படவில்லை . திருவிழாக்கள் நடைபெறும் காலம் வேறு . எனவே மெல்ல நிலை மாறி வருகிறது . ஆனால் இதன் பொருள் நாம் முன்னர் இழந்த அத்ததனையும் திரும்ப பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக கூறமுடியாது என்பதுதான் . இரண்டாவது மூன்றாவது காலாண்டில் விற்பனை சரிந்தாலும் கூட அடுத்த காலாண்டில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது .

ஒரே நாடு ஒரே தேர்தல் பின்னணி என்ன?

படம்
2017 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பிரனாப் முகர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைப் பற்றி பேசினார். அன்று சொன்னதை இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததும் மோடி அமலுக்கு கொண்டுவர முயற்சிகளைத் தொடங்கிவிட்டார். இதன் பாசிட்டிவ் பக்கம் காசுதான். ஒரே நேரத்தில் தேர்தல் என்பதால் நேரமும் பணமும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் கொள்கைகள் குறித்து உரையாடவும் நிறைய நேரம் கிடைக்கும். இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நடைமுறை, பின்னர் கைவிடப்பட்டது. காரணம், மக்களவை கவிழ்ந்ததால்தான். இந்திய அரசமைப்புச்சட்டம் 83(2), மக்களவையை தேர்தலுக்காக முன்பே கலைப்பதற்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது. இதேபோல சட்டம் 172 மாநில அரசுகளுக்கானது.  இதிலுள்ள சட்டச்சிக்கல், தேர்தலுக்காக மத்திய மாநில அரசுகள் தம் ஆட்சிக்காலம் முடிவதற்குள் சட்டசபையை, மக்கள் அவையை கலைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது, அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. ஏறத்தாழ ஒரே நாடு ஒரே