இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சர்ச்சை பிளஸ் சாகசம் = மாரடோனா!

படம்
              தங்கச் சிறுவன் மாரடோனா ! அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா 60 வயதில் மாரடைப்பால் காலமானார் . 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலகப்கோப்பை பெற்றுத்தந்த வீரர் என மாரடோனா புகழப்படுகிறார் . இப்போட்டியில் காலிறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஹேண்ட் ஆப் காட் கோல் முறை அனைத்து ஊடகங்களிலும் புகழப்பட்டு , நூற்றாண்டிற்கான கோல் என வரலாற்றில் இடம்பிடித்தது . இதுதொடர்பாக உருவான ஆவணப்படத்தில் அந்த கோல் , ஃபாக்லாந்து போரில் இங்கிலாந்து பெற்ற வெற்றிக்கான பழிவாங்கல் என்று குறிப்பிட்டார் மாரடோனா . கால்பந்து மைதானத்திலும் , நிஜ வாழ்க்கையிலும் கலககாரராக மாரடோனா இருந்தார் . மாஃபியா குழுக்களோடு தொடர்பு , பெண்களிடம் அதீத ஈர்ப்பு , கோகைன் , மதுபானம் ஆகியவற்றின் மீதான பிரியம் எப்போதும் ஊடக வெளிச்சம் இவர்மீது படும்படியாகவே வாழ்ந்தார் . மாரடோனாவுக்கு நான்கு மனைவிகள் மூலம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர் . ப்யூனோ ஏர்ஸின் வெளிப்புறத்தில் வில்லா டேவடோ என்ற இடத்தில் மாரடோனா வளர்ந்தார் . வறுமையான சூழலில் மூன்று வயதில் கால்பந்தை பரிசாக பெற்றார் . கால்பந்து விளை

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது சக்கரம் என்று கூறுபவர்களது கருத்து தவறு! - பாபாசாகேப் தோரத், காங்கிரஸ்

படம்
              நேர்காணல் பாலசாகேப் தோரத் மகாராஷ்டிரா காங்கிரஸ் சிவசேனா கட்சி காங்கிரஸ் முன்வைத்த நியாய் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது . ஆனால் சிவ போஜன் எனும் திட்டத்தை அவர்கள் மேம்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளனரே ? அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்துதான் சிவபோஜன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன . ஒற்றை கட்சியாக இப்படி அடையாளப்படுத்துவது சரியல்ல . நாங்கள் மூன்று கட்சிகளும் திட்டங்கள் பற்றி ஆலோசித்து்த்தான் செயல்படுத்தியுள்ளன . ராகுல்காந்தி அறிமுகப்படுத்திய நியாய் திட்டம் பொருளாதார அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டது . ஆனால் மாநிலத்தில் பொருளாதார பிரச்னைகள் இருப்பதால் அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் கட்சி அத்திட்டத்தை நாடுமுழுக்க மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுள்ளது . உங்கள் கட்சியில் ஒருங்கிணைப்பு ரீதியான பல்வேறு பிரச்னைகள் வருகின்றனவே . கேபினட் சந்திப்பிற்கு முன்னதாக நிதின் ராவத் அறிவித்த மின்சார கட்டண மானியம் என்பதை அசோக் சவான் தவறு என்று கூறியுள்ளாரே ? மின்சார கட்டண மானியம் பற்றி கேபினட்டில் முன்னரே விவாதிக்க

கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்மஸ்! - ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள்

படம்
                  ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள் 2020 Directed by David E. Talbert Produced by Lyn Sisson-Talbert David E. Talbert Kristin Burr John Legend Mike Jackson David McIlvain Written by David E. Talbert Starring Forest Whitaker Keegan-Michael Key Hugh Bonneville Anika Noni Rose Madalen Mills Phylicia Rashad Lisa Davina Phillip Ricky Martin Music by John Debney Cinematography Remi Adefarasin படம் கிறிஸ்மஸ் சிறப்பைச் சொல்லும் நன்னெறி சார்ந்த படம் . படத்தில் வரும் ஜெரோனிகஸ் என்ற கண்டுபிடிப்பாளர் , முக்கியமான பாத்திரம் . இவரின் கண்டுபிடிப்புகள்தான் அங்குள்ள நகரவாசிகளுக்கு முக்கியமான பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது . அங்கு வேலை செய்யும் கஸ்டாஃப்சன் , தானும் கண்டுபிடிப்பாளராக முயல்கிறார் . ஆனால் அவருக்கு அதில் உள்ள பிரச்னையை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது . அவருக்கு ஜெரோனிகஸ் புகழ்பெறுவது பொறாமையைத் தூண்டுகிறது . அப்போது பார்த்து ஜெரோனிகஸ் கண்டுபிடிக்கும் பேசும் எந்திர மனிதன் இந்த பொறாமையை சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள கஸ்டாப்சனை தூண்டுகிறான் . இதனால் ஜெரோ

உலகை மாற்றிய மனிதர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கண்ணாடி, பசை, மேப், சோப், சக்கரம்

படம்
        pixabay             சிறந்த கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கருவிகள் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு… ஆதிகாலத்தில் மனிதர்கள் கற்களை கூர்மையாக்கி கருவிகளாக பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு வேட்டையாடுதல், விலங்குகளை தோல்களை உரிப்பது ஆகிய வேலைகளை எளிமையாக்கின. கற்கருவிகளை கூர்மையாக்குவதற்கான முறைகளையும் மனிதர்கள் மெல்ல கண்டுபிடித்தது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி என்றே கூறவேண்டும்.   வரைபடங்கள் 6500 கி.பி இன்று சாப்பிடசெல்ல, மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க, பார்மசியைத் தேட என  அனைத்துக்கும் கூகுள் மேப் ஆப் உள்ளது. ஆனால் அன்று வரைபடங்களே கிடையாது. அந்த நிலையை யோசித்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. கி.பி 6500 ஆண்டுகளாக மனிதர்கள் வரைபடங்களே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். தொன்மையான பாபிலோனியாவில்தான் வரைபடங்கள் முதன்முதலில் உருவாயின. இதற்கு உதாரணமாக துருக்கியில் தற்போது அறியப்பட்டுள்ள கடல்ஹோயுக் எனும் சுவர் வரைபடங்களை சான்றாக பார்க்கலாம். இப்படம் நகரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தது. பசை கி.பி 4000 இன்று பெவிஸ்டிக், க்ளூஸ்டிக், உள்ளூர் டிய

விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

படம்
    pixabay       பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும் , சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா ? சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான் . நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை . எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம் . உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது , சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . 2002 இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர் . இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான் . மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல . கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து . இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது . உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது . விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன் ? தனி

வாழ்க்கையை கணக்கு சூத்திரங்களாக அணுகும் பேராசிரியர் வாழ்க்கையில் உணர்ச்சிகளை முக்கியமாக கருதும் மனைவி வந்தால்... பர்பெக்ட் அண்ட் கேஸூவல் 2020

படம்
            பர்பெக்ட் அண்ட் கேஸூவல் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் Title: Perfect and Casual Chinese Title: 完美先生和差不多小姐 / Wan Mei Xian Sheng He Cha Bu Duo Xiao Jie Broadcast Website: MGTV Broadcast Date: September 28, 2020 Air Time: Monday, Tuesday 20:00 (2 eps) on first week, Sunday-Monday subsequent weeks, 4 eps released early for VIP (See Viewing Calendar ) Genre: Romance Language: Mandarin Episodes: 24 Director: Li Shuang Origin: China உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கணித சூத்திரங்களாக பார்க்கும் புள்ளியியல் பேராசிரியர் ஒருவரும் , மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பும் கல்லூரி மாணவியும் ஒன்றாக இணைகிறார்கள் . அதற்கு பேராசிரியரின் தாத்தாவுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முக்கியமான காரணம் , புள்ளியல் துறையில் படிக்கும் யுன் ஷூ என்ற மாணவியை , பேராசிரியர் ஸாங் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்கிறார் . அந்த உறவு ஒப்பந்தம் என்ற எல்லையைக் கடந்து காதல் சாலையில் பயணித்ததா , இல்லையா என்பதுதான் டிவி தொடரின் மையப்புள்ளி பேரா

ஹோமியோபதி என்னென்ன நோய்களைத் தீர்க்கும் என்பதை விவரிக்கும் நூல்!

படம்
        ஹோமியோபதி டாக்டர் விஜய் ஆனந்த் கிழக்கு பதிப்பகம் இந்திய அரசு மெல்ல அலோபதி மருத்துவமுறைக்கான ஊக்கத்தை குறைத்து இந்திய மருத்துவமுறைகளுக்கு திரும்பி வருகிறது . ஆயுர்வேத மருத்துவர்கள் இனி வரும் காலத்தில் அறுவை சிகிச்சைகளும் செய்யக்கூடும் எனும்படியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது . அலோபதிக்கு நிகரான பல்வேறு மருத்துவ முறைகளில் ஹோமியோபதியும் ஒன்று . இந்த நூலில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை விவரித்து அதன் அறிகுறிகளை தெளிவுபடுத்தி அதற்கான ஹோமியோபதி மருந்துகளின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் மருத்துவர் . இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது . பிற மருத்துவமுறைகளை அறிந்துகொள்வது சில நோய்களைத் தீர்க்க உதவும் என நம்பலாம் . இனி வரும் காலத்தில் ஒரே மருத்துவமுறையில் நோய்களுக்கான தீர்வுகளைத் தேடுவது கடினம் . அனைத்து மருத்துவமுறைகளையும் இணைத்து அதற்கான கருவிகளையும் மருந்துகளையும் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் . ஹோமியோபதி மருத்துவம் பற்றிய நூல் இந்த நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது . இதில் ந