நாடக மேடையிலிருந்து உருவாகி வந்தவன் நான். அதுதான் என்னை திரைப்படத்திற்காக உந்தியது! - அனுராக் பாசு

 

 

 

 

anurag basu

 

 

 

 

அனுராக் பாசு
இந்தி திரைப்பட இயக்குநர்

உங்கள் திரைப்படம் பொதுவாகவே பெரிய கேன்வாஸ் கொண்டதாகவே இருக்கிறதே? லூடோ அந்த வகையைச் சேர்ந்ததுதானா?

பெரிய படங்களாக எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுப்பதில்லை. நான் கதையை எழுதும்போது அதனை காட்சிரீதியாக யோசித்து பார்ப்பேன். அப்படி பார்த்து பிட்டு கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சனையும், சட்டு பாத்திரத்திற்கு பங்கஜ் திரிபாதியையும் நடிக்க கேட்டு அணுகினேன். அவர்களும் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒகே சொல்லிவிட்டனர்.


சான்யா மல்கோத்ராவும், அபிஷேக் பச்சனும் நீங்கள் படத்தை இயக்கு

'Jagga Jasoos' comes from Anurag Basu's childhood memories ...

வதால்தான் உள்ளே வந்தார்கள் என்று கூறப்படுகிறதே?

நான் இதற்கு ஏதும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். செட்டில் நான் உருவாக்கும் சூழல் அப்படி அவர்களை யோசிக்க வைத்திருக்கலாம்.

நீங்கள் தொடக்கத்தில் டிவி தொடர்களை இயக்கியது திரைப்படங்களை இயக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறலாமா?

டிவி என்று இல்லை. நான் நாடகத்திலிருந்து காட்சியை எப்படி ஒருங்கிணைக்கிறேன் என்று கற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. நாடகமேடைதான் எனது ஒரே பள்ளி.

உங்கள் படத்தின் காட்சிகளையும், அதன் நுணுக்கங்களையும் இறுதிவரை ந

டிகர்களுக்கு கூட சொல்லவில்லை என்று அவர்கள் கூறினார்கள்?

அது என்னுடைய தவறுதான். நான் படத்தின் கடைசி சீன் எழுதும் வரை அதனை யாரிடமும் சொல்லமாட்டேன். ஒரு காட்சியை நன்கு எழுதிவிட்டு செட்டிற்கு சென்றாலும் அங்கும் அதனை மேம்படுத்திக்கொண்டிருப்பேன். எனவே நான் அதனை செம்மைபடுத்தாமல் நடிகர்களுக்கு எதையும் கூறவும் மாட்டேன். வசனங்களையும் தரமாட்டேன். ஒவ்வொரு படம் முடிந்தபிறகும் இப்படி அடுத்த படத்தில் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்வேன். இப்படி செயல்படுவது ஒரே வாரத்திற்கு மட்டும்தான் தாங்குகிறது. பிறகு எப்போதும் போல பழையபடி நான் படத்தை என் போக்கில் எடுக்கத் தொடங்கிவிடுகிறேன். நீங்கள் காட்சியை எழுதும்போது ஏசி ரூமில் உட்கார்ந்து எழுதுவீர்கள். ஆனால் அதே காட்சியை செட்டில் எடுக்கும்போது உங்களை நிறைய விஷயங்கள் பாதிக்கும்.

லூடோ படத்தில் ஓ பேடாஜி என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது எப்படி உங்களுக்கு தோன்றியது?

நான் முதலில் அந்தப்பாடல் டோனில் புதிய பாடலை உருவாக்கவே நினைத்தேன். ஆனால் அந்த பாடலைக் கேட்டபோது அது நன்றாக இருந்தது. எனவே அதனை அப்படியே பயன்படுத்திக்கொண்டேன்.
த த்துவரீதியாகவும் பாடல் நன்றாகவே இருந்தது.

இசை உங்கள் மீது எப்படி செல்வாக்கு செலுத்துவதாக நினைக்கிறீர்கள்?

இசை என்பது எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைக்கிறேன். எனது காட்சிகளின் பின்னணியில் பாடல் பாடப்படவில்லையென்றால் என்னால் காட்சிகளை உருவாக்கவே முடியாது. பல்வேறு வகையான இசைகளை நான் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.

நாட்டுப்புற கலைகள் மீது உங்களுக்கு ஆர்வம் உண்டு போல தெரிகிறதே?

எனது பெற்றோர் நாடக கலைஞர்கள் எனவே பல்வேறு கலைவடிவங்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. சத்தீஸ்கர் சார்ந்த நாட்டுப்புற கலைஞர்களுடன் நான் பங்குபெற்று நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன். அக்கலைஞர்களை பார்க்கும்போது எனக்கு உள்ளே உள்ள குழந்தை வெளியே வருவது போல உணர்கிறேன்.

லைப் இன் எ மெட்ரோ படத்தில் உங்களுக்கு நிறைய கதைகளை ஒரே படத்தில் சொல்லும் ஆர்வம் இருப்பது தெரியவந்தது. லூடோவிலும் அதேபோல முயன்றிருக்கிறீர்கள்?

எனக்கு படம் ஒரே வகையில் சிக்கிக்கொள்வது பிடிக்கவில்லை. ஒரு கதாபாத்திரம், அடுத்த பாத்திரம் என கதை மாறிக்கொண்டே செல்வது எனக்கு பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கும் அது மாறுதலாக இருக்கும்.

உங்கள் திரைப்பட பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் இந்த நகரத்திற்கு வந்தபோது டிவி தொடரை இயக்க நினைத்தேன். பிறகு இயக்கும் டிவி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமையவேண்டும் என நினைத்தேன். இத்தொழில்துறை எனக்கு வாய்ப்பு கொடுத்தபோது அதைப் பயன்படுத்திக்கொண்டு என்னை நிரூபிக்க முயன்றேன். உங்கள் நிரூபித்துக்கொண்டு இருந்தால், மூன்றாவது முறையும் கூட வாய்ப்பு கிடைக்கும்.

ஏற்ற இறக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் உங்கள் வேலையில் சரியாக இருந்தால், எந்த பாக்ஸ் ஆபீஸ் விஷயங்களும் உங்களை பாதிக்காது. உங்கள் வேலையில் நீங்கள் எப்படி சின்சியராக இருக்கிறீர்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். கடைசிப்படம் சரியாக ஒடாதபோது ஒரு இயக்குநருக்கு அது பின்னடைவாகத்தான் இருக்கும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆலகா சகானி


கருத்துகள்