மினி ஆப் ஸ்டோரின் பின்னணி என்ன? - கூகுளை எதிர்க்க தயாராகி விட்ட பேடிஎம் நிறுவனம்
கூகுள் தனது பிளே ஸ்டோரில் இடம்பெறும் ஆப்களுக்கு 30 சதவீதம் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தின் பின்னால் திரண்டுள்ளன. எனவே இவர்களை முன்வைத்து பேடிஎம் நிறுவனம், பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியுள்ளது. மினி ஆப் ஸ்டோர் தொடங்குவதற்கு பேடிஎம்மிற்கு இன்னொரு வலுவான காரணமும் உண்டு. சில நாட்களுக்கு முன்னர்தான், அதிலுள்ள சூதாட்ட விளையாட்டு பற்றி கூகுளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட பேடிஎம் ஆப்பை தனது பட்டியலிலிருந்து விலக்கியது.
மினி ஆப் ஸ்டோரை நீங்கள் பேடிஎம் ஆப் மூலம் அணுகி எதனையும் இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்த முடியும். இதிலும் ஆப்களை தேவை என்றால் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால் டெவலப்பர்களுக்கு மட்டும் ஆப்களை வாங்குவதற்கு இலவச சலுகை கொடுக்கிறார்கள். இப்போதே 300க்கும் மேற்பட்ட ஆப்கள் பேடிஎம்மில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரம் டெவலப்பர்களிடம் பேசி வருகிறது பேடிஎம் நிறுவனம்.
செப்டம்பர் 17 அன்று பேடிஎம் ஐபிஎல் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கியது. அதில் அதிகளவு பேடிஎம் ஆப்பின் மூலம் பணம் செலுத்துதல், பொருட்களை வாங்குவது ஆகியவற்றை செய்பவர்களுக்கு கேஷ் பேக் ஆபர் எனும் சலுகையை அறிவித்தது. அடுத்தநாளே கூகுள் பேடிஎம் ஆப் விதிமுறைகளுக்கு மாறாக குறிப்பிட்ட சூதாட்ட விளையாட்டை தனது ஆப்பில் திறக்கும்படி செய்துள்ளது என்று கூறி ஆப்பை தனது பட்டியலில் இருந்து நீக்கியது.
இதற்கு முக்கியக் காரணமாக பேடிஎம் கருதுவது, கூகுளின் கூகுள் பே நிறுவனத்தைத்தான். பேடிஎம் போலவே கூகுள் பே நிறுவனத்தையும் பிரபலப்படுத்த பல்வேறு திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கூட சூதாட்டம் தொடர்பான ஆப்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் இந்தியாவில் எதற்கு திடீரென கூகுள் தடுக்கவேண்டும் என பலரும் கேட்கிறார்கள். இந்திய மாநிலங்களில் சிலவற்றில் மட்டுமே சூதாட்டத்திற்கு தடை என்பது அமலில் உள்ளது. முதலில் ஆப்பை அனுமதித்துவிட்டு இடையில் ஏன் விதிகளை காரணம் காட்டி தடுக்கவேண்டும் என்ற கேள்வி இந்த விவகாரத்தில் எழுந்துள்ளது. மேலும் கூகுள் தனது ஆப் சேவையை பயனர்கள் பயன்படுத்தும் விதமாக அல்காரிதத்தை பயன்படுத்துகிறது என்பது அதன் மீதான முக்கியமான குற்றச்சாட்டு. தற்போது கூகுள் உயர்த்திய ஆப் விற்பனை விலையான 30 சதவீதம் என்பதை 2022ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பெறப்போவதில்லை என்பதை கூகுள் அறிவித்துள்ளது. இது பல ஆப் டெவலப்பர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடும்.
போர்ப்ஸ் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக