இடுகைகள்

கொரோனா, சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா பாதிப்பால் சூழல் மேம்பட்டுள்ளதா?

கொரோனா பாதிப்பும் சூழலும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலாகியிருக்கிறது . இந்தநேரத்தில் சூழலியலாளர்கள் சும்மாயிருக்காமல் பறவைகள் , காற்று மாசுபாடு குறைவு , இயற்கை தன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று பல்வேறு செய்திகளை வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் . உண்மையில் வைரசால் ஏற்பட்டுள்ள இந்த நிலை பேரிடர் நிலை . இதில் இயற்கை தன் சுயமான நிலைக்கு திரும்புகிறது என்று எப்படி கூற முடியும் ? உலகிலேயே அதிக காற்று மாசுபாடு கொண்ட சீனாவில் நிலைமை மாறியுள்ளதை சுட்டிக்காட்டி சூழலியல் பாடங்களை பலரும் போதிக்கத் தொடங்கியுள்ளனர் . உண்மையில் இது வளர்ச்சிதானா ? இயற்கை பேரிடர் போன்ற நிலையை நீங்கள் இயற்கைக்கு சிறப்பான சூழல் என்று சொல்ல முடியாது . இதனை சூழல்சார்ந்த கொள்கையாகவும் வகைப்படுத்த முடியாது என்கிறார் லண்டன் பொருளாதார பள்ளியைச்சேர்ந்த பேராசிரியர் சாம் ஃபான்காசர் . சீனாவில் காற்றிலுள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 30 சதவீதமும் , இத்தாலியில் 50 சதவீதமும் குறைந்துள்ளதாக ஐரோப்பாவைச்சேர்ந்த காம்ஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது . ஜெர்மனியில் பெர்லின் சுவர் இடிப்பின்போத