இடுகைகள்

இந்திரா நூயி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிராமணராக பிறந்ததுதான் வளர்ச்சிக்கு காரணம்! - இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சி

படம்
  இந்திரா நூயி  இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சிகோ மை லைஃப் இன் ஃபுல் - வொர்க் ஃபேமிலி அண்ட அவர் ஃப்யூச்சர் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில் பணி சார்ந்தும்,. சொந்த வாழ்க்கை சார்ந்தும் எடுத்த முடிவுகளை எழுதியுள்ளார்.  உங்கள் நூலில் மகளுக்கும் அம்மாவுக்கும் உள்ள சிக்கலான உறவை எழுதியிருக்கிறீர்களே? அம்மாக்களைப் பொறுத்தவரை தான் பெற்ற மகள்தான் அவர்களுக்கு குத்துச்சண்டைக்கான மணல் நிரம்பிய மூட்டை. அதில்தான் குத்தி பயிற்சி செய்வார்கள். எனது அம்மாவும் அப்படித்தான். நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம். பல்வேறு விஷயங்களை நாம் சமாளித்து வாழ வேண்டியிருக்கிறது. நீரில் வாத்து நீந்துவதைப் பார்த்திருப்பீர்கள். மேலே அழகாக நகர்ந்து போனாலும் நீருக்கு அடியில் கால்களால் நீரை உதைத்துத் தள்ளியே நகரும். வாழ்க்கையிலும் உறவுகள் இப்படித்தான் இருக்கும். நாம் சந்திக்கும் அத்தனை சவால்களையும் வெளியே கூறிவிட முடியாது.  டோரிடோஸ் சிப்ஸ், கென்டல் ஜென்னர் விளம்பர சர்ச்சை பற்றி நூலிக் கூறப்படவில்லையே? நீங்கள் சொன்ன விளம்பரத்தை எடுத்தது ஆப்ரோ அமெரிக்கர்தான். பெண்கள் பொதுவாக சிப்ஸ்களை சத்தம் போட்டு சாப்பிட மாட்டார