தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review
தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங் கட்டுரை நூல் 297 பக்கங்கள் ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை. ஷி எ...