இடுகைகள்

பாடத்திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசின் கல்வித்திட்டங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது! - பேராசிரியர் கிருஷ்ணகுமார்

படம்
  பேராசிரியர் கிருஷ்ணகுமார் கல்வியாளர் டிஜிட்டல் கல்விமுறை என்பது கல்வி கற்பதை பெரும் பிரிவினைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? பள்ளிகள் பெருந்தொற்று காரணமாக தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். நிலப்பரப்பு ரீதியாக எங்கு நோய்த்தொற்று அதிகம் பாதிக்கிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும். கல்வி நிறுவனங்களை திறப்பது, மூடுவது என்பதை அரசு கூறக்கூடாது. அதனை ஊரக அளவில் உள்ள நிர்வாகத்தினர் நோயின் பெருக்கத்தைப் பொறுத்து தீர்மானித்துக்கொள்வதாக இருந்தால் நன்றாக இருக்கும்.  மதிய உணவு வழங்குவதிலும் இதேபோன்ற சூழல்தான் நிலவுகிறது. எதற்கு பள்ளிகளில் வழங்கும் உணவை தடுத்தார்கள் என்றே புரியவில்லை. சாதாரணமாக எடுக்கும் வகுப்புகளுக்கு மாற்றாக வரும் ஆன்லைன் கல்வி முறை மாணவர்களுக்கு பெரியளவில் மாற்றாக இருக்காது என்பது ஆசிரியர்களுக்கும் தெரியும். மாணவர்களுக்கு மேசைக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதையும் கொடுக்காமல் எப்படி அவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வியை கற்றுத்தருவது? ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாத ஒன்றுதான்.  ஆன்லைனில் கல்வி கற்ற மாணவர்கள் இ

அரைகுறை படிப்பாளிகளின் ஆபத்து - சேட்டன் பகத்

படம்
பொதுவாக கல்வி தொடர்பான பேச்சுகளைப் பற்றி ஊடகங்களோ, நம் அரசியல்வாதிகளோ பேசுவது இல்லை. காரணம், அதனை உருவாக்கியதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதாலா என்று தெரியவில்லை. அண்மையில் வெளியான ஆசர் அறிக்கை(ASER 2014) கல்வியில் உலகளவில் எப்படி பின்தங்கியிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் மதிய உணவுத்திட்டம், சேர்க்கை எல்லாம் முந்தைய ஆண்டுகளை விட முன்னேறி இருக்கிறதுதான். ஆனால் கல்வியின் தரம் கூடியிருக்கிறதா? இல்லை என உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு வகுத்தல் கணக்கு போடமுடியவில்லை. இதனை தனியார் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் செய்கிறார். ஆனால் அரசுப்பள்ளி மாணவர் தடுமாறுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவரால் எளிமையான வாக்கியத்தை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்றால் நாம் பள்ளிச்சேர்க்கை பற்றி உச்சிமுகர்ந்து கொண்டாடி என்ன பயன்? காரணம் ஆசிரியர்களின் திறன் இன்மை. பள்ளிப்பாடமோ கடந்த காலத்தில் நிற்கிறது. இப்படி படித்து அரசு பெருமை கொண்டாடி வெளிவரும் மாணவர்களால் என்ன பிரயோஜனம்? வேலையில்லாமல் நாளை தெருவில் நின்