சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!
சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை! சாணக்கியர் என்றதும் அவர் கூறிய அரசியல் நெறிமுறைகள், குரூரமான செயல்பாடுகள் கண்முன்னே வந்துபோகும். ஆனால், அதை எழுதியது யாரோ, அதை ஏன் சாணக்கியர் பெயரில் பிரசாரம் செய்தார்களோ தெரியாது. உண்மையில் சாணக்கியர் என்ற மனிதர் வாழவே இல்லை என்று செய்திகள் தெளிவாக உள்ளன. இன்றுமே கூட இந்தியாவில் மௌரிய வம்சத்துக்கு வழிகாட்டியவர் என்று சாணக்கியரைக் கைகாட்டுவார்கள். சாணக்கிய தந்திரம் பற்றியும் நூல்களை ஆயிரக்கணக்கில் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் வெற்று பிரசாரமே ஒழிய வேறில்லை. ஏனெனில் சாணக்கியர் ஒற்றைக் குடுமியோடு பார்ப்பனராக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அதிகார வெறிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எப்படிப்பட்ட புரட்டையும் பேசுவார்கள், எழுதவார்கள், பரப்புவார்கள். அதை இன்று இந்தியாவே பார்த்து வருகிறது. பொதுவாக பார்ப்பனர்கள் அழிக்கப்பட்டவர்களில் மௌரிய அரசரான அசோகரும் உண்டு.ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள்தான் அரசை வழிகாட்டி நடத்தினோம் என்று கூறுகிறார்கள். கி.மு 300இல் மௌரிய அரசுக்...