இடுகைகள்

டெலிவரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகம் மூலமே எதிரிகளை நசுக்கி அழிக்கும் வீரனின் ஏகபோக வணிக வாழ்க்கைக் கதை!

படம்
  ஆர்டினரி மேன் இமிக்கிரேட் டு முரிம் வேர்ல்ட் மாங்கா காமிக்ஸ்  ஜோ வீ, நவீன உலகில் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறான். அவன் கையில் பணமில்லை. உணவுகளை டெலிவரி செய்யும் வேலையை செய்தபடி படிக்கிறான். பொருளாதார பிரச்னைகளால் காதலும் கடந்துபோகிறது. அம்மாவையும் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையி்ல் உணவு டெலிவரி செய்பவனை சொகுசு கார் ஒன்று மோதி சாய்க்கிறது. அப்போது கழுத்தில் உள்ள சிவப்பு முத்து டாலர் கீழே விழுகிறது. தனது ஒரே குடும்ப சொத்தான அதை கையில் தொடுகிறான். இறந்துபோகிறான். மறுபிறப்பு எடுக்கிறான்.  கொல்லர் குடும்பத்தில் பிறக்கிறான். ஒரு அண்ணன், தங்கை என இருவர் இருக்கிறார்கள். வட்டிக்கு கடன் வாங்கித்தான் உணவே சமைத்து சாப்பிடும் நிலை. இதை ஜோ தனது புத்திசாலித்தனத்தால் மாற்றுகிறான். ஒரு வணிகரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உழவுப்பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கிறான். இதற்கான ஒப்பந்தம், சம்பளம் ஆகியவற்றை நவீன உலகில் வாழ்ந்த அனுபவம், செய்த வேலையிலிருந்து கிடைத்த அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். ஏறத்தாழ அனைத்தும் முதலாளித்துவ உத்திகள். ஆனால், அதை முரிம் உலகில் பல

10 நிமிட டெலிவரி பயன் தருகிறதா?

படம்
  பத்தொன்பது நிமிட டெலிவரியைப் பார்த்திருப்பீர்கள். பீட்ஸா கம்பெனிகள்தான் வேகமான டெலிவரி என்ற விஷயத்தை உருவாக்கியது. இந்தவகையில் அவர்கள் 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்கு மாறினார்கள். இப்போது பிளிங்இட், பிக் பேஸ்கட், ஸ்விக்கி, ஜோமோடோ, டன்சோ என பலரும் இருபது நிமிட டெலிவரி சிஸ்டத்தில் வேலை செய்கிறார்கள். இதில் கூட டெலிவரி செய்யும் ஆட்கள் நகரங்களில் வேகமாக செல்வது,சிக்னல் விதிகளை மீறுவது என செல்கிறார்கள். இதோடு பைக் டாக்சிகளும் ஓடுவதில் பலருக்கும் குழப்பமாகிறது.  இத்தனையும்  தாண்டி ஸெப்டோ என்ற நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளே வரும்போதே பத்து நிமிட டெலிவரி என்று கூறி உள்ளே நுழைந்தது. இதனை தொடங்கியவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடிக்காத இரு இளைஞர்கள். ஒன்பது மாத நிறுவனமான இதன் இயக்குநர் ஆதித் பலிச்சா. இவரது நிறுவனம் இப்போதைக்கு 11 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் 24 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.  200 மில்லியன் நிதி திரட்டிய நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் ஆகும்.  ஆதித் பலிச்சா (வலதுபுறம்) வேகமாக பொருட்களை டெலிவரி செய்த ஆர்டர் செய்பவர்களின் அருகில் கடைகள் இருக்