இடுகைகள்

சூழலியலாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடிநீர் தேடி அலையும் விலங்குகளுக்கு உதவும் சூழல் மனிதர் - ராதாஷ்யாம் பிஷ்னோய்

படம்
  விலங்குகளின் குடிநீர் தாகம் தீர்க்கும் மனிதர்!  ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் வாழும் விலங்கினங்களுக்கு கோடைக்காலம் கடினமானது. அப்போது, நீர்வேட்கையில் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்துதான் தாகத்தை தணித்து வந்தன. தற்போது, அப்படி அலையும் விலங்குகளுக்காக குளங்களில் நீரை நிரப்பி வருகிறார் சூழலியலாள் ராதேஸ்யாம் பிஷ்னோய்.  ராஜஸ்தானின் தோலியா கிராமத்தைச் சேர்ந்தவர், பிஷ்னோய். இனிப்புகளில் சேர்க்கப்படும் கோயா எனும் பால் பௌடரைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். ஓய்வு நேரத்தில் விலங்குகளைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வருகிறார். காயம்பட்ட விலங்கினங்களை மீட்டு சிகிச்சை அளிப்பதோடு, அவற்றைப் பாதுகாப்பது பற்றிய பிரசாரத்தையும் செய்து வருகிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடைக்காலமான  ஏப்ரல், ஜூன் மாதங்களில் விலங்கினங்களுக்காக குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகளைச் செய்து வருகிறார். தோலியா கிராமத்தோடு அருகிலுள்ள  கேடோலி கிராமத்திற்கும் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளார்.  இதன் மூலம், பாலைவன  நரி, பூனை, சின்காரா மான், கழுகுகள் ஆகியவை பயன்பெற்று வருகின்றன. ”2017ஆம் ஆண்டு நீர்தேட

கண்டுபிடிப்பாளர் விருது பெற்ற இந்தியப்பெண்

படம்
செய்தி: இந்தியாவைச் சேர்ந்த சூழல் உயிரியலாளரான டாக்டர் கிரித்தி காரந்த், இந்த ஆண்டிற்கான  பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு(Women of Discovery) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விங்க்ஸ் வேர்ல்ட் க்வெஸ்ட்(WINGS WorldQuest ) என்ற நிறுவனம் வழங்கும் பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்குத் தேர்வாகியுள்ள இரண்டாவது இந்தியப்பெண் டாக்டர் கிரித்தி காரந்த். வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண் கண்டுபிடிப்பாளர் விருது டாக்டர் கிரித்திக்கு வழங்கப்படவிருக்கிறது. களப்பணியில் சாதனை கர்நாடகத்தின் மங்களூருவில் பிறந்த கிரித்தி கார்ந்த் வைல்டுசேவ்(Wildseve) என்ற தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கி சூழலியல் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். வன மக்களுக்கு மறுகுடியமர்வை உறுதிப்படுத்திய சாதனைக்குத்தான் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பத்ரா வனப்பகுதியிலுள்ள 12 ஆயிரம் குடும்பங்களுக்கான மறுகுடியமர்த்தல் பணிகளையும், அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் பணிகளை  அர்ப்பணிப்பாக செய்து சாதித்திருக்கிறார் கிரித்தி காரந்த். ”வைல்டுசேவ் திட்டத்தைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பே வனப்பாத