இடுகைகள்

மருத்துவம் - இதயநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தைக் காப்பாற்றும் டெக்னிக் என்ன?

படம்
SF இதயத்தை காப்பாற்றுவோம்! 1976 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு மறக்கமுடியாத ஆண்டு. அந்த ஆண்டுதான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் மைக்கேல் டேவிஸ், இதயத்தில் ஏற்படும் ரத்த அடைப்பு பற்றி கண்டுபிடித்தார். இதன் விளைவாக பல்லாயிரம் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் அடைத்துக்கொள்வது, அதனை சரி செய்வது, ஆக்சிஜன் போதாமை, ரத்தக்குழாய் அடைப்புக்கான புதிய கண்டுபிடிப்புகள் என மருத்துவத்துறை யோசிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதயக்குழாய்களில் கெட்ட கொழுப்பு படிந்து இறப்பு நேரிடும் அளவு, நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இன்று என்ன மாறியிருக்கிறது. பெரியளவு மாற்றமில்லை. இன்றும் கூட இங்கிலாந்தில் ஏழுபேர்களுக்கு ஒருவர் என்ற அளவில் இதயநோய் மனிதர்களை தின்று வருகிறது. அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் ”இதயநோய் ஆராய்ச்சியில் நாம் போகவேண்டிய தொலைவு அதிகம். இதில் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான மெடின் அவ்கிரன். இதயத்தில் ஸ்கேன் செய்வது, ஸ்டென்ட் வைப்பது, அறுவை சிகிச்சை என நோய்க்கு ஏற்றபட

இளைஞர்களை தாக்கும் இதயநோய்!

படம்
இதயநோய் அதிகரிப்பு! இந்தியாவில் இளைஞர்களுக்கு ஏற்படும் இதயநோய் பாதிப்பு நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. “ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் இதயநோய் பாதிப்பை 50 சதவிகிதமாக குறைத்துள்ளன. ஆனால் இந்தியாவில் இப்பாதிப்பு ஆண்டுதோறும் 5 சதவிகிதமாக அதிகரித்துவரு கிறது” என அதிர்ச்சி தகவல் தருகிறார் CADI ஆராய்ச்சி மைய மருத்துவர் இனஸ். 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இதயநோய் மருத்துவராக இனஸின் அனுபவங்கள், அவரை உஷார்படுத்த கேரள மருத்துவர்கள் சங்கத்திற்கு தலைவரானவுடன் 300 மருத்துவர்களையும் சோதிப்பதில் வெளிப்பட்டது. “20-30 வயதுள்ள இளைஞர்களுக்கு ஹார்ட்அட்டாக் வருவதை என்னால் நம்பமுடியவில்லை.” எனும் மரு.இனஸ், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களை சோதித்து அவர்களில் 12% பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.  இதுகுறித்த தீர்க்கமான உண்மைகளை 1996 ஆம் ஆண்டு எழுதிய ஆராய்ச்சி கட்டுரையிலும் எடுத்துரைத்தார். பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதோடு புகையிலையை கைவிடுவது முக்கியம். பிஎம்ஐ 23 யை தாண்டக்கூடாது. ரத்த அழுத்தம் 120 க்கு குறைந்தும், சர்க்கரை அளவு 100 மி.கி/டிஎல், கொழுப்