இளைஞர்களை தாக்கும் இதயநோய்!




Heart disease



இதயநோய் அதிகரிப்பு!

இந்தியாவில் இளைஞர்களுக்கு ஏற்படும் இதயநோய் பாதிப்பு நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. “ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் இதயநோய் பாதிப்பை 50 சதவிகிதமாக குறைத்துள்ளன. ஆனால் இந்தியாவில் இப்பாதிப்பு ஆண்டுதோறும் 5 சதவிகிதமாக அதிகரித்துவரு கிறது” என அதிர்ச்சி தகவல் தருகிறார் CADI ஆராய்ச்சி மைய மருத்துவர் இனஸ்.

1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இதயநோய் மருத்துவராக இனஸின் அனுபவங்கள், அவரை உஷார்படுத்த கேரள மருத்துவர்கள் சங்கத்திற்கு தலைவரானவுடன் 300 மருத்துவர்களையும் சோதிப்பதில் வெளிப்பட்டது. “20-30 வயதுள்ள இளைஞர்களுக்கு ஹார்ட்அட்டாக் வருவதை என்னால் நம்பமுடியவில்லை.” எனும் மரு.இனஸ், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களை சோதித்து அவர்களில் 12% பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். 

இதுகுறித்த தீர்க்கமான உண்மைகளை 1996 ஆம் ஆண்டு எழுதிய ஆராய்ச்சி கட்டுரையிலும் எடுத்துரைத்தார். பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதோடு புகையிலையை கைவிடுவது முக்கியம். பிஎம்ஐ 23 யை தாண்டக்கூடாது. ரத்த அழுத்தம் 120 க்கு குறைந்தும், சர்க்கரை அளவு 100 மி.கி/டிஎல், கொழுப்பு 150 இருப்பது அவசியம்.