வலதுகால் ஷூ திருடர்!- புது டெக்னிக் திருட்டு



Image result for vennela kishore comedy


பிட்ஸ்!

வலதுகால் ஷூ மிஸ்ஸிங்!

அமெரிக்காவின் வர்ஜீனியாவிலுள்ள ஷூக்கடையில் திடீர் கொள்ளை. குறிப்பாக, 13 வலதுகால் ஷூக்கள் மட்டும் திருடப்பட்டிருந்ததுதான் ஆச்சரியம். அதோடு சில ஷர்டுகளும் அடக்கம். முகத்தை கவர் செய்திருந்ததால் குற்றவாளியைக் கண்டறிய போலீஸ் திணறிவருகிறது. கடந்த ஜூலையிலும் வலதுகால் ஷூக்கள் திருடுபோய் குற்றவாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா மியூசியம்!

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் கஞ்சா பொருட்களுக்கான மியூசியம் ்திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா புகைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 24 அடி நீளமும், 363 கி.கி எடையும் கொண்ட பாங்ஸில்லா பைப் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. லாஸ்வேகாஸ் மேயர் கரோலின் ஜி. குட்மேன் அண்மையில் இதனை திறந்து வைத்துள்ளார்.

மெகா ஸ்கேட்டிங் போர்டு!

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் 35 அடி நீளம் 7 அங்குல அகலத்தில் உருவாகியுள்ள ஸ்கேட்டிங் போர்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பந்தயக்கார் டயர்களும் இரும்பு ஃபிரேம்களுமாக இணைக்கப்பட்டு பத்துவார உழைப்பில் ஸ்கேட்டிங் போர்டு உருவாகியுள்ளது. “எனது மெகா ஸ்கேட்டிங் போர்டை பலரும் விரும்புவது மகிழ்ச்சி” என்கிறார் ஸ்கேட்டிங் போர்டை உருவாக்கிய சியாகிலியா.

பெயர் வைத்தால் காசு!

துரித உணவகமான கேஎஃப்சி, குழந்தைக்கு ஹர்லாண்ட் என பெயர் வைத்தால் அவர்களுக்கு கல்வித்தொகையாக ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 905 தருவதாக அறிவித்துள்ளது. செப்.9 கேஎஃப்சி நிறுவனரின் பிறந்த நாள் என்பதால் அத்தினத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு பரிசுத்தொகையை அளிக்க கேஎஃப்சி முன்வந்துள்ளது. ”எங்களுடைய நிறுவனரை இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கௌரவிக்கும் என நம்புகின்றோம்” என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரியா ஸாகும்மென்ஸ்கை.

   


பிரபலமான இடுகைகள்