ஸ்மார்ட்போன்களை ஆளும் சீனா!
மொபைல் தேசம்!
ஏதாவது க்ளூ என தலையை சொரியாதீர்கள்.
அமெரிக்காவே நைச்சியமாக பேசும் டிராகன் சீனர்கள்தான் அமெரிக்கா, இந்தியச்சந்தைகளை இடக்கையால்
ஒதுக்கி மொபைல் சந்தையை ஆண்டுவருகிறார்கள்.
அலிபாபா, பைடு, டென்சென்ட் உள்ளிட்ட
ஆன்லைன் நிறுவனங்களின் வளர்ச்சியோடு சீனாவும் 800 மில்லியன் பேர்களை மொபைல் சந்தை வாடிக்கையாளர்களாக்கி
உள்ளது. சீன மக்களில் 788 மில்லியன் பேர் இணையத்திலும் துடிப்பாக செயல்படுகிறார்கள்.
மூன்றில் ஒரு பங்கு ஆண்ட்ராய்டு சந்தை சீனாவில் இயங்குவதால்தான் கூகுள் சென்சார் செய்த
தேடுபொறியை அங்கு அறிமுகப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது.
தணிக்கை முறை இருந்தாலும்
சீனா டெலிகாம், சீனா யுனிகாம், சீனா மொபைல் எனும் மூன்று அரசு நிறுவனங்களே இணையத்தை
மொபைல் வழியே மக்களுக்கு 30 சதவிகித ஆஃபர் விலையில் அளிக்கின்றன. நூறு டாலர் விலையிலிருந்து
போன்களை ஆப்போ, ஜியாமி, விவோ, ஹூவாய் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தயாரித்து வழங்குவது
விற்பனை விண்ணுக்கு ஏற முக்கியக்காரணம். டென்சென்ட்டின் வீசாட், ஆன்ட் நிதிசேவை வசதிகளும்
பெருமளவு பயனர்களை பெற்றுள்ளது.