வீடற்றோர் நிலை என்ன?
அயர்லாந்தின் தோல்வி!
வேலைவாய்ப்பு, தொழில்துறை என அனைத்தும்
சிறப்பாக இயங்கும் அயர்லாந்து ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கை நட்சத்திரம். 5.6% ஜிடிபி
வளர்ச்சி கொண்ட அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் 700 குடும்பங்கள் தங்க வீடின்றி தடுமாறி
வருகின்றனர்.
அயர்லாந்து அரசு கடந்தாண்டு வெளியிட்ட
அறிக்கையில்(ஜூலை,2017) 6,024 பெரியவர்கள், 3,867 குழந்தைகளுக்கு தங்குமிட வசதிகளை
ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம் என கூறப்பட்டிருந்தது. தற்காலிக டென்ட் முகாம்களை அமைத்து
பொருளாதாரத்தில் தடுமாறுபவர்களுக்கு அரசு உணவளித்து வருகிறது. “சமூக வளர்ச்சி திட்டங்களில்
அரசின் தோல்வி இது. மக்கள் பலரும் தங்கும்படியான சமூகவளாகங்களை அரசு உருவாக்குவது அவசியம்”
என்கிறார் சமூக செயல்பாட்டாளரான நியாம் ராண்டல். வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் சமயம்,
தங்குமிடங்களுக்கான விலை, வசதிகளை பெறுவதிலும் சிக்கல் நிலவிவருகிறது. வாடகை கட்டிடத்தை
சமூகசெயல்பாட்டாளர்கள் குழு ஆக்கிரமித்ததை மக்கள் பாராட்டினாலும் நீதிமன்றம் அதனை எதிர்த்து
போராட்டக்காரர்களை அக்கட்டிடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. கருக்கலைப்பு சட்டம்,
ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் உள்ளிட்ட முற்போக்கு செயல்பாடுகளால் பெற்ற பெருமையை அயர்லாந்து
வீடற்றோர் விஷயத்தில் இழந்து வருவது உண்மை.