சுயதணிக்கை படங்கள் ஆபத்தானவை! - விஷால் பரத்வாஜ்
மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் வாழ்ந்தவர் நீங்கள். கிராமங்களை மையமாக கொண்டே பல்வேறு திரைப்படங்களை எடுத்துள்ளீர்கள். என்ன காரணம்?
சிறு, குறு கிராமங்களிலுள்ள முரண்பாடுகளை என்னை அதிகம் ஈர்க்கின்றன. அதில்தான் திரைப்படத்திற்கான கதைகள் எளிதாக கிடைக்கின்றன. இன்றும் கிராமங்களில் வாழ்வதற்கான போராட்டங்களை நீங்கள் பார்க்க முடியும். வாழ்வின் ஆழமான அனுபவத்தை நீங்கள் இங்குதான் அனுபவ பூர்வமாக உணரமுடியும். பஷாரத் பீரின் Curfewed Nights படித்து அதனை திரைப்படமாக திரும்ப கூறவேண்டும் என விரும்பினேன். நகரங்களைக் கடந்த பேசப்படவேண்டிய விஷயங்கள் கிராமங்களில் உள்ளது என உறுதியாக நம்புகிறேன்.
வேறு ஏதாவது நாட்டில் திரைப்படம் எடுக்க ஆசையுள்ளதா?
நான் இந்தியா கடந்து அமெரிக்காவில் சில மாதங்கள் வசித்துள்ளேன். ஆனால் அங்கே கதை செய்வதற்கான இன்ஸ்பிரேஷன் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காஷ்மீரில் தங்கியிருந்தபோது ஹைதர் படத்திற்கான கரு தோன்றியது.
படாகா படம் பற்றி கூறுங்கள்.
ராஜஸ்தான் என்றால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? டர்பன் மனிதர்கள், சிவப்பு மணல் இவைதானே? இவை எதுவும் படத்தில் கிடையாது. மவுண்ட் அபுவில் பாறை நிறத்திலான மண், வெளியுலக வெளிச்சம் படாத மனிதர்கள் என படாகா இதுவரை பார்க்காத தன்மையில் உருவாகியுள்ளது.
படத்தை நீங்கள் உருவாக்கும் பாணி என்ன?
கதாபாத்திரங்கள் வாழ்கின்ற இடம் எதுமாதிரியானது? வீடா, விளையாட்டு மைதானமா? என்பது முக்கியம். அடுத்து கதாபாத்திரங்களின் வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகளை இரண்டாவதாக கருத்தில் கொள்கிறேன். கதை நிறைவடையும்போது நம் மனதில் சந்தோஷம் ஏற்படுகிறதா? அல்லது துக்கம் நிறைகிறதா? என்பது கடைசி. ஷேக்ஸ்பியரின் ட்வெல்த் நைட் நாடகத்தில் சகோதரன் - சகோதரி உறவுதான் முக்கியமானது. சகோதரன், சகோதரியாகவும் இங்கு இருப்பதுதான் நகைச்சுவை.
இந்தியாவில் இன்றுள்ள தணிக்கைமுறை பெரும் சர்ச்சையாகி வருகிறது. பயத்துடன் எடுக்கும் படம் இயல்பான கலையை கொன்றுவிடாதா?
நிச்சயமாக. ஆனால் பெரும்பாலான படங்கள் முழுத்தடையை பெறுவதில்லை என்பது ஒருவகை நிம்மதி. என்எஃப்டிசியின் நிதியுதவியில் உருவாகும் படங்கள் கூட அரசின் தடையை பெற்று. ஆனால் பின்னாளில் அவை விலக்கப்பட்டுள்ளன. தணிக்கை முறையை விட சுயதணிக்கையுடன் அச்சத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் பேராபத்தானவை. இப்படி சிந்தனை முடத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்களின் பயணம் சிக்கலானது.
இந்தி திரைப்படங்கள் அரசியல் பார்வையின்றி உள்ள நிலையில் காஷ்மீர் பிரச்னை பற்றி ஹைதர் படத்திலும், முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தை மாத்ரு கி பிஜிலி மண்டேலா படத்திலும் வெளிப்படுத்தியிருந்தீர்கள். இது உங்களை தனிமைப்படுத்தவில்லையா?
திரைப்பட இயக்குநர் என்றில்லை வாக்களிக்கும் குடிமகனாக இருந்தாலும் உங்களுக்கென தனி அரசியல் இருக்கும் என்பது உண்மைதானே? இந்தி திரையுலகம் அரசியலை தேர்ந்தெடுக்காததன் காரணம், படத்தை தடை செய்து முடக்கும் செயல்கள்தான்.
இந்துத்துவ நாடு என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
1947 ஆம் ஆண்டே இந்து நாடு கருத்தியல் காலாவதியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாக முஸ்லீம்கள் நம்முடன் வாழ்கிறார்கள். அவர்களை எப்படி பிரித்து பார்ப்பீர்கள். நான் வலதுசாரி மற்றும் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிரானவன். அரசியலமைப்பு அனைவருக்கும் அளித்துள்ள சுதந்திர உரிமைகளை நான் மதிக்கிறேன்.
தமிழில்: ஜெ.அன்பரசு சண்முகம்
நன்றி: சஞ்சுக்தா சர்மா, Scroll.in