பிரான்ஸ் அமைச்சர் பதவி விலகியதன் பின்னணி!






Image result for france environment minister resign

சுற்றுச்சூழல் அமைச்சர் விலகியது ஏன்?

அண்மையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அமைச்சரவையிலிருந்து சுற்றுச்சூழல் அமைச்சர் நிகோலஸ் ஹியூலட் பதவி விலகியுள்ளார். மேக்ரான் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை சரியாக முன்னெடுக்கவில்லை என தற்போது விமர்சனங்கள் எழத்தொடங்கிவிட்டன.

2017 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்ற நிகோலஸ், டிவி மற்றும் ரேடியோவில் பணியாற்றியவர். “நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும்தான் மிச்சம். இனியும் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்க விரும்பவில்லை. எனவே அரசிலிருந்து விலகுகிறேன்” என ரேடியோவில் அறிவித்துவிட்டு பதவி விலகிவிட்டார் நிகோலஸ் ஹியூலட்.
ரேடியோ, போட்டோகிராபி என ஆர்வம் கொண்டவரை நாடெங்கும் பிரபலப்படுத்தியது சாகச நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆவணப்படம் Ushuaïa, le magazine de l’extrême(1987-1995) ஆகும். பின்னர் என்ஜிஓ தொடங்கி சூழலியல் குறித்த சிந்தனைகளை விதைத்தவர். “அமைச்சர் பதவியில் கனடா தாராள வர்த்தகம் உள்ளிட்ட சூழல்கேடு தரும் சமரசங்களை ஏற்றார்” என்கிறார் சூழலியலாளர் டியோன். அதிகாரத்திலிருப்பவர்கள் அறம் பேணுவது கடினம் என்பதை நிகோலஸின் வெளியேற்றம் உறுதி செய்துள்ளது.


பிரபலமான இடுகைகள்