இடுகைகள்

எண்ணிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் வேறுபடுவது எங்கு? - ஜவகர்லால் நேரு உரை

படம்
              எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராஜ்குமார் அம்ரித் கௌருக்கு அஞ்சலி செலுத்துவதில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன். என்னுடைய நினைவில் மருத்துவமனையையு்ம, தலைவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அந்தளவு அவரின் பணி, மருத்துவமனையோடு ஒன்றிவிட்ட ஒன்று. மருத்துவமனையின் உருவாக்கம் தொடர்பாக கௌர், பல்வேறு விஷயங்களை என்னோடு விவாதித்திருக்கிறார். செயல்பாடுகளில் பிரச்னைகள் வரும்போது என்னைத் தேடி வந்திருக்கிறார். இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மனதளவில் வேதனை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தபோது, சரி என இசைவு தெரிவித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனை அளவிலும் தரத்திலும் வாக்குறுதி அளித்த வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. செயல்பாடுகளும் பாராட்டு்ம தரத்தில் உள்ளது. முதுகலை படிப்பு படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியான சிறந்த இடமாக இம்மருத்துவமனை உள்ளது. சிகிச்சையின் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்க பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்து வருகிறார்கள். எண்ண...

குரோசோம்களின் எண்ணிக்கை உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும்! ஜே.வி. சமாரி

படம்
  பரிணாம வளர்ச்சி உயிரியலாளர்  ஜேவி சமாரி ( JV Chamary ) அனைத்து உயிரினங்களும் குரோமோசோம்கள் கொண்டிருக்குமா? ஆம். எளிமையான செல் அமைப்பைக் கொண்ட பாக்டீரியா, வட்ட வடிவிலான குரோமோசோம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. சிக்கலான செல் அமைப்பைக் கொண்டுள்ள உயிரினங்கள் அதிக குரோமோசோம்களைக் கொண்டுள்ளன என்று கூறமுடியாது. ஜேக் ஜம்பர் என்ற ஆண் எறும்பு, ஒரே ஒரு குரோமோசோமைக் கொண்டுள்ளது. ஆனால், ஒற்றைச் செல்லைக் கொண்டுள்ள அமீபா போன்ற ஸ்டெர்கீலா (sterkiella) என்ற உயிரி 16 ஆயிரம் குரோமோசோம்களை கொண்டுள்ளது.  உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை  மாறுபடுவது ஏன்? உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை அதன் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மனிதக்குரங்குகளின் உடலில் 48 குரோமோசோம்கள் என்றால் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற மனிதர்களின் உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள்தான் உள்ளன. நமது உடலில் தேவையான குரோமோசோம்கள் கூடுதலாக இருந்தால் அல்லது  இல்லாமல் போனால் புற்றுநோய் ஏற்படும். டவுன்  சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில், 21 குரோமோசோம்கள் மூன்று நகல் பிரதிகளாக இருக்கும்.  அன...

மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு! பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது. பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்...