இடுகைகள்

ஜியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனத்தை குடும்பத்தினர் நடத்துவதை விட தகுதியுள்ளவர்கள் நடத்தவேண்டும்! - சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல்

படம்
                சுனில்பார்தி மிட்டல் ! ஏர்டெல் நீங்கள் டெலிகாம் சார்ந்து மட்டும்தான் செயல்படுகிறார்கள் . பிற நிறுவனங்கள் போல பல்வேறு சேவைகளை வழங்கும் எண்ணம் இல்லையா ? பிற நிறுவனங்கள் வழங்காத பல்வேறு சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது . நாங்கள் அமேசான் , நெட்பிளிக்ஸ் , ஜீ 5 நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளை வழங்குகிறோம் . எங்களிடம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் கிடையாது . பெரிய ஸ்டூடியோ கிடையாது என்பது உண்மைதான் . ஒருமுறை ஏடிஅண்ட்டி டைம் வார்னர் நிறுவனங்கள் இணைந்தபோது , அதன் இயக்குநரிடம் பேசினேன் . எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் வரப்போகின்றன . அப்போது நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நிறுவனம் தேவை என்று கூறினார் . இப்படி நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவது பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது . ஆனால் அந்நிறுவனம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . ரிலையன்ஸ் நிறுவனம் 2 ஜி தேவையில்லை என்று கூறிவருகிறதே ? நாங்கள் இப்போது 3 ஜி விவகாரத்தில் உள்ளோம் . மெல்ல மக்களும் 4 ஜி சிம் கார்டுகளை வாங்கிவருகிறார்கள் . 2 ஜியிலிருந்து மக்கள் இப்போதுதான் 4 ஜிக்கு மாறுகிறார்கள்

இந்தியாவில் சூப்பர் ஆப்பிற்கான தேவை உள்ளதா? வரிசை கட்டும் டாடா, ஜியோ, பேடிஎம்

படம்
    சூப்பர் ஆப்பின் தேவை இருக்கிறதா? இன்று நம் அனைவரின் போன்களிலும் ஷாப்பிங் தளங்களுக்கான ஆப் குறைந்தபட்சம் ஒன்றேனும் உள்ளது. இதுபோக பிற ஓடிடி தளங்களுக்கான ஆப்கள் தனி. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே ஆப்பில் இணைந்திருந்தால் அதுதான் சூப்பர் ஆப். சூப்பர் ஆப்பில் ஒரு வணிக குழுமத்தின் அனைத்து சேவைகளும், அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். இதன்மூலம் தேவையில்லாமல் தனித்தனியாக பல்வேறு ஆப்களை ஒருவர் தரவிறக்கும் அவசியம் இல்லை. இந்த சூப்பர் ஆப் ஐடியாவை டாடா குழுமமே முன்னதாக யோசித்து அதே வேகத்தில் அறிவித்துவிட்டது. டாடா குழுமம் இந்த சூப்பர் ஆப்பை வால்மார்ட் குழுமத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதற்கான பட்ஜெட்டாக வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃபிளிப்கார்ட் 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உணவு, உடை, வாழ்க்கை முறை, கல்வி, நிதி, பொழுதுபோக்கு என அனைத்து பிரிவுகளும் ஒரே ஆப்பில் உள்ளடங்கிவிடும். இதற்கடுத்த சூப்பர் ஆப் வாய்ப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் உள்ளது. இதன் மை ஜியோ ஆப் சூப்பர் ஆப்பாக மாறினால், கல்வி, மருத்துவமனை, பொழுதுபோக்கு, சில்லற

ஜியோவுக்கு மூன்று ஆண்டு நிறைவு! - இஷா அம்பானியின் கனவு!

படம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவாகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா, இந்த நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு காரணம், யேல் பல்கலையில் படித்தபோது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் இணைய இணைப்பு மிக மெதுவாக இயங்குவதாக தந்தை முகேஷிடம் கூறினார். அதுவே பின்னர் ஜியோவாக குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா என மாறி இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது. மேற்சொன்ன சம்பவம் நடந்தது 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டு தனது துணிகர பிசினஸ் முயற்சிக்காக லண்டனில் விருது பெற்றுவிட்டார் முகேஷ். பேசும் அழைப்புகள் இலவசம். டேட்டாவுக்கு குறைந்த காசு என்ற திட்டம் ஏர்டெல் உள்ளிட்ட கம்பெனிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எதிர்பார்த்தது போலவே இந்தியர்கள் ஜியோவைத் தேர்ந்தெடுத்தனர். இன்று இந்திய அரசு அமைப்புகள் கூட ஜியோவை தங்களது தொலைபேசி நிறுவனமாக ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்த நேரத்தில் உங்கள் மூளையில் பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் என்ற நிறுவனங்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஜியோ என்பதற்கான லோகோவும இஷாவின் ஐடியாதான். பழமையான ரிலையன்ஸ் லோகோவை கடாசிவிட்