இடுகைகள்

நெறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பௌத்தம் அறிவோம் - வழிகாட்டும் புத்தரின் நெறிகள்

படம்
புத்தர் காலமாகிவிட்ட நிலையில் அவர் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? மின்சாரத்தை கண்டறிந்த பாரடே இறந்துவிட்டார்தான். ஆனால் நாம் இன்றும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம். ஆன்டி பயாடிக் மருந்தைக் கண்டுபிடித்து லூயி பாஸ்டர் இன்று நம்மோடு இல்லை. ஆனாலும் கூட அவரின் கண்டுபிடிப்பு மக்களின் உயிரைக் காத்துக்கொண்டுதானே உள்ளது. ஓவியத்துறையில் பல உன்னத படைப்புகளை உருவாக்கிய லியனார்டோ டாவின்சி காலமாகி பல்லாண்டுகள் ஆகிறது. அவரது ஓவியங்களைக் காணும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. ஊக்கம் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம் அல்லவா? வரலாற்று நாயகர்களும், நாயகியரும் இறந்து பல நூறு ஆண்டுகளானாலும் கூட அவர்களின் லட்சியங்கள், நம்பிக்கை நமக்கு ஊக்கம் கொடுப்பவை. நீங்கள் கூறியதுபோல புத்தர் காலமாகி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். ஆனால், அவர் கற்பித்த கொள்கைகள், நெறிகள், கூறிய அறம், காட்டிய பாதை இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு ஊக்கம் தந்து வருகிறது. வழிகாட்டியாக அமைந்துள்ளது. புத்தரின் வார்த்தைகள் பல நூறு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இறந்து பல நூறு ஆண்டுகளாயினும் புத்தருக...

மனிதர்களின் வாழ்வை வடிவமைக்கும் மூன்று உளவியல் அம்சங்கள்!

படம்
  ஃப்ராய்டின் மகள் செய்த ஆய்வுகளைப் பற்றி பேசுவோம். இவர் தந்தை ஃப்ராய்ட் செய்த ஆய்வுகளை மறுத்து வேறு கருத்துகளை முன்வைத்தார். அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளுக்கு பாம்பு ஒன்று தடை செய்யப்பட்ட கனியை சாப்பிட ஆசை காட்டி, அவர்கள் சாப்பிட்ட கதையை படித்திருப்பீர்கள். கிறிஸ்துவ மத புனித நூலான பைபிளில் மேற்சொன்ன கதை இடம்பெற்றுள்ளது. இதை அடையாளம் காட்டுவது போலவே ஃப்ராய்ட் தனது உளவியலை மூன்று அம்சங்கள் கொண்டதாக வடிவமைத்தார். இதில் ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ ஆகியவை உள்ளடங்கும்.  இதில் ஐடி என்பது பாம்பு. ஆசையைத் தூண்டிவிடுவது. உணவு, பாலியல் உணர்வு, உடை, வீடு என பல்வேறு விஷயங்கள் மீது ஆசைப்படத் தூண்டுவது என கொள்ளலாம். சூப்பர் ஈகோ என்பது நடத்தை கொள்கை, லட்சியம் என கொள்ளலாம். பெற்றோர்கள், சமூகம் சொல்லும் நன்னடத்தை விதிகள், வாழ்க்கை நெறிகள் ஆகியவற்றைக் கொண்டது. ஈகோ என்பது மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடைபட்டு முடிவெடுத்து இயங்குவது. மனதில் ஆசைகள் காவிரியாக பொங்கினாலும் அதை அடக்கியபடி முடிவுகளை எடுக்கும் செயல்திறன் கொண்டது.  தந்தை ஃப்ராய்ட் கூறிய கருத்துகளை ச...

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தர...

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது ...