இடுகைகள்

கொக்ககோலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொட