பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?
பெப்சி தனது
லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு
லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம்
ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில்
முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது.
இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது.
கோலா நிறுவனங்களுக்கு
இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது
சந்தை லாபம், பெப்சியிடம் செல்வதை உணர்ந்து,
புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன்
டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம்
போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால்
அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு
புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொடங்கிவிட்டனர்.
மூன்று மாதங்களில்
புதிய ஃபார்முலாவை கிழித்துபோட்டுவிட்டு பழைய கோலாவையே கையில் எடுத்தது கொக்ககோலா. நிதானமாக புதிய சுவையில்
உருவாக்கிய கோலாவை ஒரு சிறிய கப்பில் ஊற்றி மக்களிடம் கொடுத்து சோதித்துப் பார்த்து
அறிமுகப்படுத்தியிருந்தால் ஆராய்ச்சிக்ககான பணம் வீணாகியிருக்காது. கொக்ககோலாவின் சிவப்பு, வெள்ளை நிறத்தை ஒருவர் எந்த
இடத்தில் இருந்தாலும் அடையாளம் கண்டுபிடிக்கலாம். சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு
நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி செய்து குளிர்பானங்களை உலகமெங்கும் விற்றுவருகிறது. உண்மையில்
எந்த இடத்தில் சறுக்கியது?
மக்கள் பெரும்பாலான
நேரம் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. செயல்களை செய்வதில்லை. கார் ஓட்டும்போது, ஆபீசில் வேலை செய்வது பற்றி,
ஆபீசில், மனைவி, குழந்தைகளை விடுமுறைக்கு கூட்டிச்செல்லவேண்டிய இடம் பற்றி, சாப்பிடும்போது
போனில் உள்ள பொழுதுபோக்கு செய்திகளை ஆராய்வது, உடலுறவின்போது மனைவியைத் தவிர்த்து பிற
பெண்களை நினைத்து உச்சம் அடைவது என யோசனைகள் பலவும் வேறு இடங்களில் உள்ளன. பொதுவாக,
நம்மில் பலருக்கும் நிறைய விஷயங்கள் இப்படித்தான் நடக்கின்றன. கடைக்குள் சென்று பொருட்களை
வாங்குவதிலும் என்றோ பார்த்த, வீட்டில் பெற்றோர் தேர்ந்தெடுத்த பொருட்களே நினைவில்
இருந்தால் உங்கள் கை தானாக பொருட்களை வாங்கும். அதைப்பற்றிய பெரிய நினைவு, சுதாரிப்பு
ஏதும் மனதில் இருக்காது.
உப்பு என்றால்
டாடா, கோதுமை மாவு என்றால் ஆசீர்வாத், நெய் என்றால் அமுல், சோப்பு என்றால் கோத்ரேஜ்,,
பல்ப் என்றால் பிலிப்ஸ், சோடா என்றால் லெஹர், ஷேவிங் க்ரீம் என்றால் ஓல்ட் ஸ்பைஸ் என
தேர்ந்தெடுப்பது இப்படித்தான் நடக்கிறது.
ஒரு பொருளைத்
தேர்ந்தெடுக்க செல்கிறீர்கள். அங்கு நிறைய பிராண்டுகள் இருப்பது நல்லதா, அல்லது குறைந்த
எண்ணிக்கையில் பொருட்கள் இருப்பது நல்லதா? இதில் அதிக வாய்ப்புகளை தேடுபவர்கள் உண்டு.
அதேசமயம், அதுவா, இதுவா என குழம்பி நின்றுவிடுபவர்களும் உண்டு. கடைக்காரர்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை
தருவதை விட, சிறந்ததாக உள்ள ஒன்று அல்லது இரண்டு பொருட்களை வாங்கி வைத்து அதை வேகமாக
விற்கவே முயல்கிறார்கள். சாதாரணமாக ஒரு கடையில் நூறு பொருட்கள் இருந்தால், அதில் வேகமாக விற்கும் பொருட்கள் பத்துதான் தேறும். அதில்
கவனம் செலுத்தினால் நிறைய லாபம் சம்பாதிக்கலாமே?
இப்படித்தான் வணிகர்களின் கண்ணோட்டம் செல்லும்.
image - pinterest
கருத்துகள்
கருத்துரையிடுக