நெசவாளர்களை வாழ வைக்கும் உடை வடிவமைப்பாளர்களின் முயற்சி!
கேரளத்தில்
பிரபலமாகும் பாலின பாகுபாடற்ற ஆடைகள்
கேரளா மாநிலத்தின்
செண்டமங்கலம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், இப்போது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு
காரணம் புதிய தலைமுறை வடிவமைப்பாளர்களின் ஆடைகள். இவர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து
நெய்து விற்பதுதான். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் சங்கம் முதலில் நஷ்டத்தில்
இயங்கியது. இதன் ஆடைகள் மக்கள் பெரிதாக அடையாளம் கண்டு வாங்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இதற்கு காரணம்,
இளைய தலைமுறையினர்தான்.
சில ஆண்டுகளுக்கு
முன்னர், ஶ்ரீஜித் ஜீவன், ஷாலினி ஜேம்ஸ், ஆகிய வடிவமைப்பாளர்கள் மேலும் பலருடன் சேர்ந்து
கைவிடப்பட்டு வந்த கைத்தறி நெசவை மீட்டெடுக்க முயன்றனர். 2022ஆம் ஆண்டு இருபத்து நான்கு
வயதான பருல் குப்தா, யுகா எனும் பிராண்டை உருவாக்கினார். இதற்கு உதவிய ஹெச் 47 சங்கம்
இதனால் மக்களிடையே புகழ்பெற்றது. கடந்த செப்டம்பரில் இந்த பிராண்டில் 33 புதிய ரகங்கள் வெளியாயின. இப்போது பருல் குப்தா,
கிரு கேஷிகி எனும் புதிய ஆடை ரகங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ரகங்களின்
சிறப்பு, இவற்றை ஆணும், பெண்ணும் என இரு பாலினத்தவருமே அணியலாம் என்பதுதான். அதாவது
பாலின பாகுபாடற்ற ஆடைகள். ஆங்கிலத்தில் ஜெண்டர் நியூட்ரல் ஆடைகள் என்று கூறலாம். இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட் அண்ட் டிசைன் நிறுவனத்தில் படித்தவர் பருல் குப்தா. பிரபல வடிவமைப்பாளர் ஹிமான்சு சானியிடம் வேலை செய்து
அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்.
பிறகுதான்
தனது வேலை மீது நம்பிக்கை கொண்டு, கேரளாவில் உள்ள நண்பரும் வடிவமைப்பாளருமான கதா கோபாலுடன்
சேர்ந்து செண்டமங்கலத்தில் புதிய ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கியுள்ளனர்.
கேரளத்தில்
கலாசார உடையாக முண்டு, சேலை, உள்ளது. அதற்கேற்ப நூல் இழைகளைப் புரிந்துகொண்டு தொழிலாளர்களின்
ஒத்துழைப்புடன் புதிய ஆடை வகைகளை வடிவமைத்திருக்கின்றனர். கிரு கேஷிகி என்ற சொல்லுக்கு
நிலப்பரப்புகளின் அடையாளம் என்று பொருள். அதாவது கேரளத்தில் உள்ள பல்வேறு நிலப்பரப்புகளை மையப்பொருளாக கொண்டு ஆடைகளை வடிவமைப்பது. இந்த வகையில்
பருல் குப்தா தனது ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
இந்த ஆடைகளின்
சிறப்பே இதிலுள்ள வித்தியாசமான மென்மையான நிறங்கள்தான். நீர்ப்பரப்பில் உள்ள நீலம்,
பச்சை, வானில் உள்ள மஞ்சள், ரோஸ் நிறம், வயல்களில் உள்ள பசுமையான நிறம், சூரிய அஸ்தமனம்
ஆகியவற்றை திட்டமிட்டு நூல் இழைகளில் கொண்டு
வந்திருக்கின்றனர்.
ஆடைகளை கைகளால்
நெய்வது, இயற்கை நிறத்தைப் பயன்படுத்துவது, தொழிலாளர்களுக்கு, வடிவமைப்பாளர்களுக்கு
சரியான சம்பளம், பாதுகாப்பான வேலைச் சூழல் ஆகியவற்றை முக்கியமான அம்சங்களாக கருதுகின்றனர். அதை நோக்கியே
புதிய தலைமுறை கலைஞர்கள் பயணித்து வருகிறார்கள்.
நிதி அட்லாகா
இந்து ஆங்கிலம்
--------------------------------
இன்ஸ்டாகிராமில்
யுகா குளோத்திங் என தேடினால் உடைகளைப் பற்றிய தகவல்களை அறியலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக