முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி
கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை
வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள்
தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள்.
ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர்.
எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்?
பதில்.
இந்த கேள்வி
தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும்,
மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும் இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு
என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில்
இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை.
நீங்கள்,
இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக
உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப் பற்றிய
விஷயங்களில் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது.
புறவயமான பாதுகாப்பின் மதிப்பு குறைவாக இருந்தாலும் கூட குறைந்தபட்சம் அதை மக்கள் பெற்றுள்ளனர். எனவே, மனம், இதயம் என இரண்டுக்குமான பாதுகாப்பு
பற்றியும். அதை பெறுவது பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை.
நான் பாதுகாப்பு
என்பதை வேறுவிதமாக கூறுகிறேன். அதை தெளிவாக புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆனால்
ஒருவர் கூறுவதை பிறர் எளிதாக தவறாக புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. ஒருவர் வார்த்தைகளின் மாயத்தைப் பயன்படுத்தி
கருத்துகளை அறிந்து அதைப் பிறருக்கு வெளிப்படுத்த நினைக்கிறார். எனது உரையின்போது நீங்கள்
மேற்சொன்ன விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
அறத்தை தேடிசெல்கிறீர்கள் என்றால், பாதுகாப்பு என்பது
அதற்கு எதிராகவே இருக்கும். உங்கள் மனதில் அறத்தை பெறும் இடம் பற்றியும் திருப்தி, கொண்டிருப்பீர்கள். அதுதொடர்பாக
சில விதிகளையும் வகுத்திருப்பீர்கள். எனவே
அறம் என்பதை பெறுகிறீர்கள் என்றால் அது பாதுகாப்பைப் பெறுகிறோம் என்பதுதான் அர்த்தம்.
அறத்தை அதன் மதிப்புகளுக்காக பெறக்கூடாது. அது, நமக்கு என்ன வழங்கும் என்று பார்க்க
வேண்டும். உங்களது செயல்பாடுகள் வழியாக அறத்தைப் பெறவே முயல வேண்டும். செயல்பாடுகள்,
அப்படி அமையாதபோது அதில் பயனில்லை.
உங்கள் மனம்
அறத்தை ஏதேனும் வழியில் பெறுவதற்கு முயல்கிறது. உங்களது செயல்பாடுகள், அறத்தை பெறுவதற்கான
படிக்கல்லாக அமைய வேண்டும்.இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு ஆன்மிக அனுபவமே
தேவையாக இருக்கிறது; புறவயமான பாதுகாப்பு அல்ல.
புறவயமான பாதுகாப்பு அம்சங்களாக வங்கியில் நிறைய பணம், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து,
பிறர் மதிக்கும்படியான பணி ஆகியவை கிடைத்தவர்கள் ஆன்மிக பாதுகாப்பு தேடி வருகிறார்கள்.
அல்லது புறவயமான பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காதவர்கள், ஆன்மிக பாதுகாப்பையேனும் பெறலாம்
என அதைப்பெற முயல்கிறார்கள்.
ஆனால் என்னைப்
பொறுத்தவரை மனம், உணர்ச்சி ஆகியவை சொகுசாக இருக்கும்படியான பாதுகாப்பும், அதைத் தரும்
காப்பகமும் எங்குமே இல்லை என்பதே எனது கருத்து.
இதை நீங்கள் உணர்ந்தால் சொகுசு என்ற சிந்தனையில் இருந்து மனம் சுதந்திரமடையும்.
அதற்குப் பிறகு பாதுகாப்பு பற்றி கவலைப்பட அவசியமில்லை.
நான் வறுமையை
அனுபவிக்காத நபர் என்ற வகையில் எப்படி அதை புரிந்துகொண்டேன் என கேட்டிருக்கிறீர்கள்.
இதற்கான பதில் எளிமையானது. நான் உடல், மன ரீதியான
பாதுகாப்பைத் தேடாத வரையில் என் நண்பர்கள் எனக்கு உணவு வழங்குவது, வேலை கொடுப்பது என்பதற்கு
எந்த அர்த்தமும் இல்லை.
ஓரிடத்திற்கு பயணம் செய்வது அல்லது பயணம் செய்யாமல்
இருப்பது என்பதற்கு பெரிய வேறுபாடு ஏதுமில்லை.
நான் பாதுகாப்பை தேடாத காரணத்தால் முழுமையானவனாக இருக்கிறேன். எனக்கு மிகச்சில புறவயமான தேவைகள் மட்டுமே உண்டு.
ஆனால் நான் எனது புறவய பாதுகாப்பைத் தேடினால்,
புறவய தேவைகளை, வறுமையை வலியுறுத்துகிறேன் என்று பொருளாகும்.
நாம் இதை
சற்று வேறுவிதமாக பார்ப்போம். உலகில் நடைபெறும் பெரும்பாலான சண்டைகள் பொறாமை, பொறாமை
அல்லாதது சார்ந்தவைதான். பலரும் ஒன்றை கையகப்படுத்தி அதை பாதுகாக்க நினைக்கிறார்கள்.எதற்காக பொறாமை
சார்ந்த வலியுறுத்தல் உருவாகிறது? அதுதான் நமக்கு சக்தி, மகிழ்ச்சி, திருப்தி
ஆகியவற்றைக் கொடுக்கிறது. அது தவிர தனிநபருக்கு ஒரு வித உறுதியை, செயல்பாட்டிற்கான
நம்பிக்கையை,, பேராசையைத் தருகிறது. பொறாமையை விரும்புவதற்கு காரணம், அதிலிருந்து நிறைய
விஷயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால்தான்.
நாம் முழுமையடைந்தவர்களாக
வாழ்ந்தால் வாழ்க்கை முழுவதும் ஒத்திசைவான தன்மையில் இயங்க முடியும். வாழ்வில் பொறாமை
அல்லது வறுமை என்பது முக்கியமானதாக இருக்காது. நாம் பொறாமையைத் தேடுவதன் வழியாக வாழ்க்கையின்
முழுமையை, வளமையை இழந்துவிடுகிறோம். நாம் நமக்குள்ளாக முழுமை பெற்றிருந்தால், அனைத்து விஷயங்கள் பற்றிய ஆழமான அறிவைத் தேட முடியும்.
அதன் மூலமும் மனமும், இதயமும் ஒத்திசைவாக வாழ வாய்ப்புண்டு.
Talk at
stresa, 8 july 1933
கருத்துகள்
கருத்துரையிடுக