காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை உருவானது எப்படி? - காலக்கோடு
காலிஸ்தான் வரைபடம் |
காலிஸ்தான் தனி மாநிலமாக.. அதன் லோகோ |
காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை
-காலக்கோடு
1920ஆம் ஆண்டு அகாலி தளம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.
இந்த கட்சி, பஞ்சாபி மக்களுக்கான தனி நாடு கோரிக்கையை உருவாக்கியது. இதற்காகவே பஞ்சாபி
சுபா என்ற இயக்கம் உருவானது.
1966
பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களாக உருவானது.
இதில் சில பகுதிகள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றது. சண்டிகர் நகர், மைய நகரமாக
மத்திய அரசின் யூனியன் பிரதேச நகரமாக மாற்றப்பட்டது.
1969
அரசியல் தலைவர் ஜக்ஜித் சிங் சோகன் இங்கிலாந்திற்கு சென்றார்.
அங்கு சென்று காலிஸ்தான் நாட்டை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார்.
1973
அகாலி தளம் கட்சி, பஞ்சாப் மாநிலத்திற்கு சுயாட்சி கோரி
ஆனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை (Anandpur sahib resolution) உருவாக்கியது.
1978
துறவி நிரான்காரி மிஷன் அமைப்பின் உறுப்பினர்களுக்கும்,
மரபான சீக்கியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பதினாறு பேர் கொல்லப்பட்டனர்.
ஜர்னைல்சிங் பிந்த்ரான்வாலேவை பஞ்சாபிற்கு கூட்டி வருவதற்கான கருத்தில் ஏற்பட்ட மோதலே,
கொலைக்கு முக்கியமான காரணம்.
1982
அகாலி தளம் கட்சியும் பிந்த்ரன்வாலேவும் சேர்ந்து ‘தரம்
யுத் மோர்ச்சா’ என்ற பேரணி ஒன்றை நடத்தினர். முன்னர் கூறியபடி, பஞ்சாப்பிற்கு சுயாட்சி
தரச்சொல்லி அரசை கட்டாயப்படுத்துவதே பேரணியின் நோக்கம். இதை வலியுறுத்த அமிர்தசரஸ்
தங்க கோவிலுக்குள் சென்றனர்.
1984 ஜூன் 1-8
இக்காலகட்டத்தில், இந்திராகாந்தி பிரதமராக இருந்தார்.
சீக்கியக் கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்ததை அடுத்து, அவர்களை கோவிலுக்குள் வைத்தே
கொல்ல ராணுவத்திற்கு உத்திரவிட்டார். இந்த ராணுவ திட்டத்திற்கு ஆபரேஷன் ப்ளூஸ்டார்
என்று பெயர். இதன்படி, பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். அவருடைய சக தோழர்களும் அழிக்கப்பட்டனர்.
1984 அக்டோபர் 31
பிரதமர் இந்திராகாந்தி, அவரது சீக்கிய பாதுகாப்பு வீரர்களாலேயே
சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், டெல்லியில் தொடங்கி நாடெங்கும் சீக்கியர்களுக்கு
எதிரான கலவரம் வெடித்தது.
1985
ராஜீவ்காந்தி – லாங்கோவால் ஒப்பந்தம் முடிவானது. இதன்படி,
அரசு அகாலி தளம் அரசியல்கட்சி, முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.
1980-1990
கேபிஎஸ் கில் தலைமையில், காவல்துறை மாநிலத்தை இயல்பான
நிலைக்கு கொண்டு வர முயன்றது. மத்திய பாதுகாப்புப்படை மாநிலமெங்கும் தீவிரவாதிகளை வேட்டையாடியது.
விமானத்தாக்குதல் நடத்தியது, படுகொலைகளை செய்தது.
2023
அம்ரித்பால் சிங், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது
ஆவேச பேச்சு மூலம் வலியுறுத்தினார். காலிஸ்தான் தனிநாட்டிற்காக மக்கள் போராடவேண்டும்
என்று கூறினார். தனது நெருக்கமான தோழர் காவல்துறையில் கைது செய்யப்பட, ‘’அஜ்னாலா காவல்நிலையத்தை
தாக்கவேண்டும்’’ என்று கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக