சிறை சென்று திரும்பினாலும் விடாத கொலை வேட்கை

 









சார்லஸ் வில்லியம்

சார்லஸிற்கு வயது 31. திருமணமானவர். பியானோ ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் விவகாரத்து பெற்றவர்கள். தனிமையில் வளர்ந்தவர்.  1966ஆம் ஆண்டு முதல் கொலையை  செய்தார். காவல்துறை சார்லஸின் வீட்டை சோதனை செய்து 25 வயதான சூசன் என்ற பெண்ணின் உடலைக் கண்டறிந்தது. அடித்து, கத்தியால் குத்தப்பட்டு இறந்து போயிருந்தார். செய்த கொலைக்கு தண்டனையாக பதினைந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சிறையில் முன்மாதிரி கைதியாக நடந்துகொண்டார். இதனால் சார்லஸிற்கு 1973ஆம் ஆ ண்டு பிணை வழங்கப்பட்டது. பிணை பெறுவதற்கான அவர் நிறைய நாடகங்களை நடத்தினார்.  ‘’பிணை பெறுவதற்கான எடுத்த சவால்’’ என்று கூட பகிரங்கமாக கூறினார்.

1974ஆம் ஆண்டு, க்ரீன்விட்ச் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில் கரேன் என்ற வளர்ந்து வரும் நடிகை நிர்வாணமாக இறந்து கிடந்தார். யார் கொலையாளி என்று அதிகமாக சந்தேகப்படக்கூட இல்லை. ஏனெனில் அருகில்தான் சார்லஸ் வீடு இருந்தது.

திரைப்படம் தொடர்பான இதழில் போலியாக விளம்பரம் கொடுத்து கரேனை அங்கு வரவைத்து டையால் கழுத்தை இறுக்கி கொன்றார். சார்லஸை விசாரணை செய்து குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பது எல்லாம் பெரிய சிக்கலாக இல்லை. அவரே தனது குற்றத்தை ஏற்றார். முன்னர் நிலுவையில் இருந்து பதினைந்து ஆண்டு சிறைதண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் மனதில் என்ன நினைத்தாரோ, சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

படம் - பின்டிரெஸ்ட்  


கருத்துகள்