ஆண், பெண் என இருபாலினத்தவரை ஈர்க்கும் உடைகளின் டிரெண்ட்! - மாறும் கலாசாரமும் வணிகமும்

 






டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்  - கே டிராமா

இட்ஸ் ஓகே நாட் டு பி ஓகே




ஆண், பெண் என இருந்த உடை வேறுபாடுகள் இப்போது உடையத் தொடங்கிவிட்டன. ஆண்கள் அணிந்த ஆடைகளை பெண்களும், பெண்களின் தேர்வாக இருந்த நிறங்களில் ஆண்கள் பல்வேறு உடைகளை வாங்கி அணியத் தொடங்கிவிட்டனர். ஆண்களும் நிறைய பூச்சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டு கடற்கரைகளில் உலாவத் தொடங்கிவிட்டனர்.

உச்சமாக, இந்தியாவில் கூட பாலின பேதமற்ற உடைகளை தைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆடைகளை ஆண்களும், பெண்களும் யார் வேண்டுமானாலும் வாங்கி அணியலாம். ஆண், பெண் என பர்பியூம்கள் கூட வேறுபட்டு விற்றுக்கொண்டு இருந்த நிலை இருந்தது. இன்று அதுவும் கூட மாறி வருகிறது. உண்மையில் யோசித்து பாருங்கள். பர்ஃபியூம்களில் ஆண் என்ன, பெண் என்ன? வியாபாரம் அப்படி தனியாக பிரிந்துவிட்டது. அதற்கேற்ப விளம்பரங்களை உருவாக்கி மனதில் பிரிவினையை ஏற்படுத்தி பொருட்களை கூவி விற்கிறார்கள்.

இன்று உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் பல்வேறு நாடுகளிலுள்ள டிவி தொடர்களைப் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் தென்கொரிய டிவி தொடர்களைப் பார்த்து உச்சிகுளிர்ந்து போனவர்கள் அதிகம். அந்த நாட்டு டிவி தொடர்களில், நடிகைகளை விட நடிகர்கள் உச்ச அழகாக இருப்பார்கள்.

கிம்ச்சி


இந்த வகையில் கொரிய நாட்டு அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது, அந்த நாட்டு உணவுப்பொருட்களை வாங்கிச் சாப்பிடுவது (கிம்ச்சி, ராமன், ஃபீப் சூப், சோஜூ) என தனி கலாசார உலகமே சென்னையில் இயங்கி வருகிறது. இதை சென்னையிலுள்ள தென்கொரிய தூதரகமும் ஆதரிக்கிறது. அவர்களுக்கு, இதன் மூலம் பல்வேறு வணிக பொருட்களை விற்க முடியும். கலாசாரம் சார்ந்தும் ஒற்றுமை அதிகமாக இருக்கையில் வணிகம் மட்டும் குறைவாகவா நடக்கும்? டிவி தொடர் மூலம் எளிதாக ஒரு நாட்டின் வணிகமே பெரும் வளர்ச்சி அடைகிறது. இது நல்ல ஐடியாவாக உள்ளது அல்லவா? கொரிய, சீன உணவுப்பொருட்களை சென்னையில் உள்ள உணவகங்களில் சாப்பிடும்போது சாப்ஸ்டிக்குகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சாமிக்கு அலகு குத்துவது போல கன்னத்தை குச்சி குத்தி கிழித்து வெளியே வந்துவிடும்.

கே டிராமா, ஜே டிராமா, கே பாப் என உலகளாவிய அளவில் பல்வேறு விஷயங்களை பார்க்கும் கேட்கும் ஆண்கள், தங்களை அழகாக்கிக் கொள்ள முயன்று வருகிறார்கள். எல்லாம் செக்ஸ் அப்பீலுக்காகத்தான். அப்போதுதானே பெண்களுக்குப் பிடிக்கும்.  இதனால் உடலிலுள்ள தேவையற்ற ரோமங்களை நீக்குவது, உறுப்புகளை திருத்தி செய்யும் அறுவை சிகிச்சைகளை செய்ய ஏராளமான பணத்தை செலவிட்டு வருகின்றனர். இவர்கள் எல்லோரும் வேறு யாருமில்லை. முன்னர் சொன்னோமே அதே ஆக்ஸ் ட்யோடிரண்ட் பயன்படுத்திய ஆட்கள்தான். இன்று ஆண்கள் தங்கள் சருமம், மென்மையாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள். அதற்காக சம்பாதித்த பணத்தை செலவழிக்கிறார்கள். கட்டிங், சட்டை, பேன்ட், செருப்பு என அனைத்தையும் தேர்ந்தெடுக்க மெனக்கெடுகிறார்கள். மேக்ஸ், லூயிஸ் பிலிப், பீட்டர் இங்கிலாந்து ஆகிய கடைகளில் சென்று பேன்ட் ஒன்றின் அளவைப் பார்க்கிறீர்கள் என்றால். அளவு மாறுபட்டு இருக்கும். அதாவது, 32 இன்ச் பேன்ட் ஒன்றை மேக்ஸில் அணிந்து பார்த்தால், அதே அளவு என நினைக்கும் பேன்ட் பீட்டர் இங்கிலாந்தில் கூடுதலான அளவாக இருக்கும். அதாவது, 34 இன்ச் என. லூயிஸ் பிலிப்பில் அளவு இன்னும் மாறுபடும். இதெல்லாம் கடைக்காரர்களின் விற்பனை தந்திரங்கள். ஒரே மாதிரியான அளவுகளை இவர்கள் பின்பற்றுவதில்லை.

முந்தைய தலைமுறையில் அம்மா மகனுக்கு பல்வேறு உடைகளை வாங்கிக் கொடுப்பார். அடுத்து திருமணமாகும்போது, அம்மாவின் இடத்தை மனைவி நிரப்புவார். இதனால் உடைகள் மிக கச்சிதமாக இருப்பது பற்றி ஆண்கள் கவலைப்படவில்லை. ஆனால் புதிய தலைமுறை இளைஞர்கள் அனைத்திலும் கச்சிதம், நறுவிசு எதிர்பார்க்கிற ஆட்கள். பிரபல பிராண்டுகளில் பேன்ட் வாங்கும்போது கூட நீளமாக உள்ள கால்பகுதியைக் கூட கச்சிதமாக மடித்து தைத்து வாங்கிக்கொண்டுதான் கடையை விட்டு வெளியே வருகிறார்கள். மேக்ஸ் போல சில கடைகளில் துணிகளை  விற்பதில் சில்லறைத்தனமான ஏமாற்றுதல் நடந்தாலும் பெரும்பாலான கடைகளிலும் விற்கும் பொருட்களின் விற்பனையில் கவனம் செலுத்துகிறார்கள். 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்