வயதான பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து வல்லுறவு செய்த மர்ம ஆசாமி

 









ஒரே ஆண்டில் மக்களை மீளாத பயத்தில் ஆழ்த்த முடியுமா? அதை வல்லுறவு ஆசாமி ஒருவர் செய்தார். இவரை வெஸ்ட் சைட் ரேபிஸ்ட் என்று அழைக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1974-1975ஆம் ஆண்டில் மட்டுமே 33 பெண்களை மர்ம ஆசாமி வல்லுறவு செய்தார். அதில் பத்து நபர்களைக் கொன்றார். இறந்த பெண்கள் அனைவருமே 63 – 92 வயது கொண்டவர்கள். முதிய பெண்களை தேடிக் கொல்வதால் பலரும் பீதியடைந்தனர். எனவே, சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து துப்பாக்கி, கத்தி, கோடாரி என வாங்கத் தொடங்கினர். எல்லாம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான்… வேறு எதற்கு? யார் கொலையாளி என பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களையே சந்தேகமாக பார்த்துக்கொண்டார்கள். தூங்கும்போதும் கூட கைவிரல்கள் துப்பாக்கி ட்ரிக்கரை தொட்டபடி இருந்தன.

1974ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று, மேரி  என்ற 72 வயது பெண்மணி கொல்லப்பட்டார். அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வயதான பெண்கள் தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டனர். முன்னர் சொன்னது போல அதில், பத்து பேர் கொல்லப்பட்டனர்.

 காவல்துறை முடிவு இல்லாத தேடுதலை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் கொலையாளி கிடைத்த பாடில்லை. ஆனால் அதற்கு பதிலாக வயதான பெண்களை தாக்கி கொன்ற குற்றவாளி ஒருவர் கிடைத்தார். அவர்தான் பிராண்டன் தொல்மர். இவர் மனநல மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்ற கொலையாளி.

இவருக்கு, 1981ஆம் ஆண்டு முதல் நான்கு பெண்களை தாக்கி கொன்றதற்காக , ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. பிராண்டன் கொலை செய்த பாணி, வெஸ்ட் சைட் ரிப்பரைப் போன்றதுதான். அவர்தான் வேறு ஒரு பெயரில் கொலை செய்தாரோ இல்லையோ தெரியாது. ஆனால் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டனர். ஆனால் வெஸ்ட் சைட் ரிப்பரை உண்மையில் யாரென அடையாளம் காண முடியவில்லை.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்