பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!
கோண்ட் பழங்குடிகள் |
கலைஞர் மங்களா பாய் |
ஒரு தொன்மை
மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது
என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து
வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள்,
இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள.
இதற்கான மை
தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான
மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய
பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள்.
இந்த மையை
ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில்
பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை
குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.
நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள்.
இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெற்றவர்கள் என்று பச்சை
குத்தும் கலைஞர்கள் கூறுகிறார்கள். அவர்களின் வழியே நாடோடியாக வாழும் நரிக்குறவர்கள்
பச்சை குத்துதலை தேர்ந்தெடுத்து திறன் பெற்றிருக்கிறார்கள. பெருநகரமான சென்னையில் மெரினா
கடற்கரையில் கூட பச்சை குத்துவதை செய்து வருகிறார்கள்.
இந்தியாவில்
உள்ள கோண்ட், பைகா ஆகிய பழங்குடி மக்களின் டாட்டூக்கள் பெரும்பாலும் இயற்கையை மையமாக
கொண்டவை. பைகா வகை டாட்டூக்கள் தலை தொடங்கி பாதம் வரையிலும் கூட வரையில் விசாலம் கொண்டவையாக
உள்ளன.
கோண்டு பழங்குடிகளில்
எட்டு அல்லது பத்து வயது சிறுமிகளாக இருக்கும்போதே டாட்டூ வரைவதற்கான பயிற்சிகளை வழங்கத்தொடங்கிவிடுகிறார்கள்.
கோண்டு பழங்குடியைச் சேர்ந்த மங்களா பாய், ஏழு வயதில் டாட்டூ பயிற்சியைப் பெறத் தொடங்கியிருக்கிறார். இவர், மத்தியப் பிரதேசத்தில் லால்பூர் கிராமத்தைச்
சேர்ந்தவர். மங்களா இயற்கையான மூலிகைகளை பயன்படுத்தி டாட்டூ மையை தயாரித்து பயன்படுத்துகிறார்.
நோய்த்தொற்றை தடுக்க மஞ்சளைப் பூசுகிறார்.
பொதுவாக ஒருவர்
எதற்கு பச்சை குத்திக்கொள்கிறார் அல்லது டாட்டூ வரைகிறார்? சமூக அடையாளம், குலம், தன்னைப்
பற்றிய அடையாளம் ஆகியவற்றை நினைவுபடுத்த மணிக்கட்டு, மார்பு ஆகிய இடங்களில் பச்சை அல்லது
டாட்டூ வரைகிறார்கள். பெண்கள் தங்களின் நெற்றியில் டாட்டூ வரையத் தொடங்கியுள்ளனர்.
பெருநகரிலுள்ள மக்கள் பலரும் பழங்குடி மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே பச்சை குத்துதலை செய்துகொள்வதும் அதிகரித்து
வருகிறது. ஏதாவது ஒரு வழியில், பழங்குடி மக்களின் கலை பிழைத்து வருகிறது.
சஞ்சனா கணேஷ்
இந்து ஆங்கிலம்
image -herzindagi.com
https://www.herzindagi.com/inspiration/mangala-bai-tribal-tattoo-artist-saving-traditional-art-article-219945
கருத்துகள்
கருத்துரையிடுக