நோயாளிகளைக் கொன்று வாழ்வில் உயர்ந்த மருத்துவர்!

 








மருத்துவத்துறையில் நிறைய தொடர்கொலைகாரர்கள் உண்டு. இவர்களை அடையாளம் கண்டு தடுப்பது மிக கடினம். தடுப்பதற்குள் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். பிணக்கூராய்வு செய்து உண்மையை அறிந்தகொள்ள வேண்டும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர். இரண்டாம் உலகப்போர் சமயம் ஊக்கத்துடன் செயல்பட்டு 500 பேரை கொன்றார். உண்மையில் இப்போது கூறியுள்ளது கூட தோராயமான எண்ணிக்கைதான். உண்மையான எண்ணிக்கை அல்ல.

ஃபிரெட், 1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். நல்ல படிப்பாளி. விளையாட்டு வீரரும் கூட. எப்போதும் தன்னைப் பற்றிய பெருமிதத்தில் அலைந்த ஆள். எனவே, நெருங்கிய நட்பு அமையவில்லை. லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதல் முறை விண்ணப்பத்து தோற்றுப்போனவர். இரண்டாவது முறை வெற்றி பெற்று மருத்துவப்படிப்பு படித்தார்.

தனிமையாக வகுப்பறைக்கு வந்து படித்தவர், பதினேழு வயதான பிரைம்ரோஸ் ஆக்ஸ்டோபி என்ற தனது ஜூனியர் பெண்ணை மணம் செய்தார். 1966ஆம் ஆண்டு மணம் செய்தவருக்கு, 1967ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். 1971ஆம் ஆண்டு மகன் பிறந்தான். 1974ஆம் ஆண்டு தொடங்கி மருத்துவப் பயிற்சி செய்யத் தொடங்கினார். தனது சக மருத்துவர்கள், நோயாளிகளிடம் பாச நேசமாக பழகியவர், தனது மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்.

பணியில் திடீரென ஃபிரெட் மயங்கி விழத் தொடங்கினார். பிளாக் அவுட் என்ற பிரச்னைக்கு காரணம் என என சக மருத்துவர்கள் ஆராய்ந்தனர். அப்போது பெத்தடைன் என்ற மருந்தை ஃபிரெட் பயன்படுத்துவது தெரிந்த து. 1975ஆம் ஆண்டு அவரை வேலையை விட்டு நீக்கினர். போலியாக மருந்து குறிப்புகளை எழுதி மருந்து வாங்கியதற்கு அவர் மீது வழக்கு பதிந்தனர். 600 டாலர்களை அபராதம் கட்டினார். அப்போது எதற்கு பெத்தடைனை இந்தளவு வாங்கி ஃபிரெட் பயன்படுத்தினார். அவர், அதை தானே பயன்படுத்தியிருக்கிறார். ஒருவேளை நோயாளிகளை கொல்ல பயன்படுத்தினாரோ என பல கோணங்களிலும் சந்தேகம் கொண்டனர்.

அபராதம் கட்டிய ஃபிரெட் எதைக் கண்டும் பயப்படவில்லை. எந்த கேள்விக்கும் பதில் கூற வில்லை. 1977ஆம் ஆண்டு குழந்தைகள் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அங்கு பதினெட்டு நாட்கள் வேலை செய்தார். அவ்வளவுதான். அங்கிருந்து வேறு வேலைக்கு தாவினார். முதலில் இரு பிள்ளைகள் பிறந்தனர் அல்லவா, இப்போது மேலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டார். வசதியான வீடு பார்த்து மோட்ரம் என்ற பகுதிக்குச் சென்று குடியேறினார்.

நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொண்டாலும் தனது மாணவர்கள், பணியாளர்களிடம் கரடுமுரடாக நடந்துகொண்டார். பலரையும் பரிகாசம் பேசி மனம் நோக வைத்தார். டானிப்ரூக் மருத்துவமனையை விட்டு சடாரென விலகிய ஃபிரெட் தனி கிளினிக் ஒன்றை அருகிலேயே திறந்தார். தான் மருத்துவம் பார்த்து வந்த 3 ஆயிரம் நோயாளிகளை தனது கிளினிக்கிற்கு கூட்டிச்சென்றார். இது டானிப்ரூக் மருத்துவர்களுக்கே ஆச்சரியம். மருத்துவமனை நிர்வாகமோ மருத்துவரின் இந்த  துரோகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

மருத்துவர் ஃபிரெட் நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொண்டதால் மருத்துவமனைக்கு தேவையா ன பொருட்களை வாங்க அவர்களே நன்கொடை கொடுத்தனர். ஃபிரெட் வாழ்ந்த நகரில் மொத்தம் 104 மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் ஃபிரெட் டாப் 5 மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்றால் அவருக்கு எத்தனை நோயாளிகள் வந்திருப்பார்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். எந்த நேரத்தில் எப்போது என்ன மருந்து கேட்டாலும் உடனே அதை எழுதித் தரக்கூடிய மருத்துவர் அவரே.

அதேநேரம் அவர் பராமரிப்பில் இருந்த நோயாளிகள் அடிக்கடி இறந்துபோகத் தொடங்கினர். ஆனால் அவர்கள் வயதானவர்கள் என்பதால் பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. பிணக்கூராய்வு கூட செய்யவில்லை. கேத்லீன் என்ற பெண்மணி தனது 82 ஆவது பிறந்த நாளுக்கு முன்னர் திடீரென இறந்துபோனார்.

அவர் ஒரு தாளில் உயில் எழுதி வைத்திருந்தார். அதில், தனது மூன்று லட்சம் டாலர்கள் மதிப்பிலான சொத்தை,  தனக்கு மருத்துவம் பார்த்த ஃபிரெட்டிற்கு எழுதி வைத்திருந்தார். இது குடும்பத்தினருக்கும், காவல்துறையினருக்கும் சந்தேகம் கொடுத்தது. மருத்துவர் ஃபிரெட்டை விசாரித்தனர். இறந்துபோன பதினெட்டு நோயாளிகளில் பதினைந்து பேர்களின் பிணக்கூராய்வு தகவல்களை சோதித்தனர். அதில், மார்பின் அதிகளவு கொடுத்து நோயாளிகள் கொல்லப்பட்டது தெரிய வந்தது. கொலைகளை செய்த காரணத்திற்காக ஃபிரெட்டிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவர் ஃபிரெட் வேலை செய்த அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரைண செய்தனர். கொலையானவர்களை கண்டுபிடித்து சோதனை செய்து ஆதாரங்களை சேகரித்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர், அறையில் திடீரென  தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

படம் - பின்டிரெஸ்ட் 

மேஜிக் எம்பரர் காமிக்ஸ் 

கருத்துகள்