இடுகைகள்

புதிய கனிமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆராய்ச்சியில் கிடைத்த புதிய கனிமம்

படம்
  புவியியல் பூமியிலிருந்து கிடைத்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்